கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Wednesday, 28 April 2021

*தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களே அஞ்சல் வாக்கு செலுத்த முடியாத நிலை : தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர். டாக்டர் அ.மாயவன் குற்றச்சாட்டு*


 

தமிழ்நாடு சட்டப்பேரவை;த் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அஞ்சல் வாக்குகள் முழுமையாக சென்று சேரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களே அஞ்சல் வாக்கு செலுத்த முடியாத நிலை உள்ளதாக பட்டதாரி ஆசியரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கரோனா தொற்று காரணமாக மக்கள் அதிகம் கூடாதிருக்க 88 ஆயிரத்து 937 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

அதில், வாக்குச்சாவடி அலுவலர்கள் நான்கு லட்சத்து 91 ஆயிரத்து 27 பேருக்கு அஞ்சல் வாக்குகள் வழங்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நடைபெற்ற மூன்று கட்டப் பயிற்சி வகுப்பின்போது, அஞ்சல் வாக்கினைச் செலுத்துவதற்கான படிவம் 12 வழங்கப்பட்டு, அவர்களின் விவரங்கள் பெறப்பட்டன.
அதனைத் தொடர்ந்து தேர்தல் உதவி நடத்தும் அலுவலர்களால் அஞ்சல் வாக்குகள் தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அஞ்சல் வாக்குகள் முழுமையாகச் சென்று சேராத நிலையில் உள்ளது. இதனால், ஆசிரியர்களில் சிலர் தங்களின் ஜனநாயகக் கடமையைச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், அதன் *நிறுவனர் அ.மாயவன்* சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தலுக்கு முன்னர் வழக்குத் தொடர்ந்தார். அதில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அஞ்சல் வாக்குகள் பதிவுசெய்வதிலும் நடைமுறைச் சிக்கல் உள்ளது.
எனவே தேர்தலுக்கு மூன்று நாள்களுக்கு முன், சம்பந்தப்பட்ட தொகுதியில் அவர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும்.
அஞ்சல் வாக்குகள் பதிவுசெய்வதற்கான வாக்குச்சீட்டுகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு கடைசிகட்ட பயிற்சியின்போது வழங்கப்படுகிறது எனவும், அந்த வாக்குச் சீட்டில் அலுவலர்களின் அத்தாட்சியைப் பெற வேண்டியுள்ளதாகவும், அத்தாட்சிப் பெற்றாலும், பணியமர்த்தப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல வேண்டிய காரணத்தினால் அஞ்சல் வாக்குகளைப் பதிவுசெய்வதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை எனவும் கூறியிருந்தார்.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு 100 விழுக்காடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனாலும், வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அஞ்சல் வாக்குகள் வந்து சேரவில்லை எனக் குற்றச்சாட்டு உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர் மாயவன் கூறும்போது, “2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது நான்கு லட்சத்து 35 ஆயிரத்து மூன்று ஊழியர்களில், மூன்று லட்சத்து 97 ஆயிரத்து 697 பேர் அஞ்சல் மூலம் வாக்களித்தனர். இதில், 37 ஆயிரத்து 712 பேர் வாக்குகளைச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.
மேலும், 24 ஆயிரத்து 912 பேருடைய வாக்குச்சீட்டுகள் அலுவலர்களின் அத்தாட்சி இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. இதனால் 62 ஆயிரத்து 624 பேர் வாக்குகள் வீணாகிவிட்டன. 100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்.
தேர்தலுக்கு மூன்று நாள்களுக்கு முன்பே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிக்க, சம்பந்தப்பட்ட தொகுதிகளில் தனி வாக்குச்சாவடிகளை அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம்.


தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களின் அஞ்சல் வாக்கு

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில், 100 விழுக்காடு வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் நான்கு லட்சத்து 79 ஆயிரத்துு 892 பேர் நியமனம்செய்யப்பட்டனர்.
அவர்களில் 25 விழுக்காட்டினருக்கான அஞ்சல் வாக்குகள் இன்னும் வந்து சேரவில்லை எனத் தெரிகிறது.
தேர்தல் பயிற்சி வகுப்பின்போதே படிவம் 12 (பி) பூர்த்திசெய்து அளித்தனர். சரியான முகவரி உள்ளிட்ட விவரங்களை அளித்தும், அஞ்சல் வாக்குகளை அனுப்பாமல், வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறும் நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள அஞ்சல் வாக்குகளை உடனடியாக ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அதனைப் பூர்த்திசெய்து 1ஆம் தேதிக்குள் அனுப்ப முடியும். எனவே தழ்நாடு தேர்தல் அலுவலர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.

செய்தியாளரை சந்தித்த மாயவன்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய நியமனம்செய்யப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் நான்கு லட்சத்து 91 ஆயிரத்து 27 பேருக்கு அஞ்சல் வாக்குகள் வழங்கப்பட்டிருந்தது.
மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஒரு லட்சத்து 50 காவலர்கள் ஈடுப்பட்டனர். அவர்களில் வெளி மாவட்டங்களில் ஈடுப்பட்டவர்களுக்குத் அஞ்சல் வாக்குகள் அளிக்கப்பட்டன. சென்னையில் ஐந்தாயிரத்து 800 காவலர்களுக்கு அஞ்சல் வாக்குகள் அளிக்கப்பட்டன.
தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களில் அஞ்சல் வாக்குகளைப் பெற்றவர்களில் 27ஆம் தேதி வரையில் நான்கு லட்சத்து 99 ஆயிரத்து 964 அஞ்சல் வாக்குகள் பதிவாகியிருக்கிறது எனத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தெலங்கானா உள்ளாட்சித் தேர்தல்: கரோனா நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

மே 1 முதல் அனைத்து வகை ஆசிரியர்களும் பள்ளிக்குவரத்தேவையில்லை- பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை

Sunday, 25 April 2021

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு வேப்பனப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பலி


*⚫இரங்கல் செய்தி* 

*கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. நரசிம்ம மூர்த்தி (வயது 55) அவர்கள் உடல் நலக்குறைவு (கொரோனா தொற்று) *காரணமாக நேற்று இரவு காலமாகிவிட்டார். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்*

*தொடரும் ஆசிரியர்கள் மரணம்!*

*மௌனம் காக்கும் அரசாங்கம்!!*

*இன்னும் எத்தனை பேரை தான் காவு கேட்கும் இந்த பள்ளிக் கல்வித்துறை*

*வேகமாக பரவி வருகின்ற உருமாற்றமடைந்த கொரோணா வைரஸால்  ஒட்டு மொத்த இந்தியாவே கதிகலங்கி போயுள்ள இந்த சூழலில் தலைமையாசிரியர் பெருமக்களும் ஆசிரியர் பெருமக்களும் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருவது மிகுந்த வருத்தத்தை தருகின்றது*

*இந்த இக்கட்டான காலகட்டத்திலும் பள்ளிக்குச் சென்று கல்வித்துறை கட்டளையிட்ட அனைத்து பணிகளையும் செவ்வனே செய்து முடித்து தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் உழைத்து வரும் ஆசிரியர் சமுதாயத்தினரிடையே இத்தகைய மரணங்கள் மாபெரும் பீதியை கிளப்பியுள்ளன*

*ஒன்று முதல் பதினொன்றாம் வகுப்பு வரை தேர்வுகள் இன்றி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பும் வந்துவிட்டது,தேர்வு எழுத இருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது,மரணம் பயங்களுக்கு இடையேயும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது*

*இத்தகைய சூழலில் மாணவர்களே வராத பள்ளிக்கு ஆசிரியர்களை வரவழைத்து அவர்கள் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கின்றது இன்றைய தமிழக பள்ளிக்கல்வித்துறை*

*ஆளே இல்லாத கடையில் யாருக்கு யா டீ ஆத்துர என்று திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சியைப் போல பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களை அலைக்கழிக்கிறது.யாரை திருப்திப்படுத்த இத்தகைய கொடூர நிகழ்வினை நடத்திக்கொண்டுள்ளதோ தெரியவில்லை*

*ஆசிரியர் சங்கங்களும் இயக்கங்களும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையிலும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஏனோ செவிகள் மூடியே உள்ளன...ஆசிரியர்கள் உயிர்தானே தானே போனால் போகட்டும் ஆட்குறைப்பு ஆகட்டும்- அதனால் அரசாங்கத்திற்கு லாபம் தானேஎன்று நினைக்கிறார்களோ என்னவோ!*

*தமிழக அரசும் பள்ளிக் கல்வித் துறையும் இனிமேலாவது  நம் மீது கவனத்தைத் திருப்புமா அல்லது  தொடர்ந்து மரண ஓலங்களை கேட்டுக்கொண்டே ரசித்துக்கொண்டே இருக்குமா?உயிரோடு இருந்தால் அதையும் பொறுத்திருந்து பார்ப்போம்*

இவண்
*தமிழ்நாடு அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்*

*கிருஷ்ணகிரி மாவட்டம்*

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு தமிழாசிரியர் பலி- நம்பேரியியக்கம் கண்ணீர் அஞ்சலி


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்தவர் திருமதி. சத்தியபாமா. இவர் அங்கு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

 கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு பரிசோதனை. செய்த போது அவருக்கு கரோணா  தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்தது.

 அங்கு அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 

அவரது சடலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

*அன்னாரின் மறைவுக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் செலுத்துகிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.*

 இவண்.. 

*தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக* *நிறுவனத் தலைவர் டாக்டர் அ.மாயவன்* *எக்ஸ்எம்எல் சி மற்றும்*
*மாவட்ட நிர்வாகிகள்*.

திருப்பத்தூர் மாவட்ட பொருளாளர் திரு.P.துக்கன் அவர்களின்புதுமனை புகுவிழாவில் மாநிலப் பொருளாளர் திரு.C.ஜெயக்குமார்


இன்று புதுமனை புகுவிழா காணும் நாம் சார்ந்த தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் திருப்பத்தூர் மாவட்ட பொருளாளர் திரு.R.துக்கன்  அவர்களுக்கு அனைவரின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.💐💐💐💐

கொரோனா லாக்டவுனில் முதியவருக்கு உணவு பரிமாறிய காவல்துறை அதிகாரியை முகநூலில் பதிவிட்டதை அறிந்து-திண்டுக்கல் சரக DIG M.S.முத்துச்சாமி அவர்கள் தொலைபேசியில் என்னை அழைத்து பாராட்டினார்.



.நேற்று இரவு ஒரு முதியவருக்கு கொரோனா தொற்றையும் பொருட்படுத்தாமல் ஒரு காவல்துறை அதிகாரி அவரிடம் நெருக்கமாக அமர்ந்து உணவு பரிமாறிக்கொண்டிருந்ததை எனது முகநூலில் பதிவிட்டேன்.

எனது முகநூல் பதிவை பார்த்து இன்று அதிகாலை *திண்டுக்கல் சரக DIG மதிப்புமிகு.M.S.முத்துச்சாமி I.P.S.அவர்கள் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.* அவர் மகிழ்ச்சியில் பேசிய வார்த்தைகள்,

போலீஸ்காரங்க என்னதான் நாயா உழைச்சாலும் அவுங்களுக்கு பாராட்டு கிடைக்கிறது ரொம்ப அதிசயம் சார்..உங்களமாறி  பொதுமக்கள் பாராட்டும்பொழுது அவுங்க இன்னும் நல்லா வேலை செய்வாங்க சார். அவர் செய்த நற்செயல
உங்களுக்கு சொல்லனும்னு தோனுற அந்த குணத்தை பாராட்டுறேன் சார்.அவர் கொடுத்தாக் கூட பார்த்துட்டு அத பொதுமக்களுக்கு சொல்லனும்னு ஆசைப்படுறீங்களே அது எங்க ஒட்டுமொத்த காவலர் சமுதாயத்துக்கே சந்தோஷம் சார், தேங்க்யூ கார் தேங்க்யூ சார்னு 

என்னையும் என் பொன்னையும் பாராட்டி மகிழ்ந்தார். மனமகிச்சியாக இருக்கிறது.

நான் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரா ஒரு சில வரிகள் அய்யா M.S.முத்துச்சாமி அவர்களைப் பற்றி

2010 அன்று எங்கள் சாணார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டபோது பள்ளியில் அமைச்சர் தலைமையில் நடந்த விழாவில் அப்போதைய காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய திருமிகு.M.S.முத்துச்சாமி அவர்கள் விழாவில் கலந்துகொண்டு பேசியபோது

 *கர்மவீரர் காமராஜர் ஒருவர் இல்லை என்றால் நான் இந்த மேடையில் இன்று உங்கள் முன் நின்றிருக்கமாட்டேன் என்றார்.* அந்த கல்வியைக் கொடுத்தவர் அவர். கல்வி தான் ஒருவரை மேம்படுத்தும் என்றார் மாணவர்கள் மத்தியில்

ஆசிரியராக நான் கற்றுக்கொண்டது.

 அவர் கிராம்ப்புறங்களில
கல்வி நிலையங்களை உருவாக்காமல் விட்டிருந்தால் பட்டி தொட்டியிலிருந்து இன்று லட்சக்கணக்கான ஆசிரியர்-அரசூழியர்கள்  உருவாகியிருக்க முடியுமா. கல்வியால்தான் இன்று எனக்கும் ஆசிரியர் என்ற அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கல்வி மட்டுமே ஒருவரை மேம்படுத்தும்.

 *மதிப்புமிகு. திண்டுக்கல் சரக DIGI M.S.முத்துச்சாமி I.P.S. அவர்களின் சமூகப்பணி* மென்மேலும் சிறக்க நெஞ்சம் நிறைந்து வேண்டுகிறேன்.🙏🙏🙏

கொரோனா இரவு லாக்டவுனில் முதியவருக்கு உணவு பரிமாறிய காவல்துறை அதிகாரி - திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா


நானும் எனது மகள் விதுலா ஸ்ரீ முருகேசனும் இன்று 23.04.2021 மதுரையில் ஒரு விழாவில் கலந்துவிட்டு திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா இரவு 10.40க்கு வந்தபோது ஒரு காவல்துறை அதிகாரி அவர்கள் ஒரு முதியவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தார். இரவு லாக்டவுன் என்பதால் கடை. ஆளுக, வாகனம்னு இல்லாம இருண்டு கிடந்தது. இவர் செய்யும் நற்காரியத்தைப் பார்த்து காரை நிறுத்தச் சொல்லி தைரியமாக எனது அருமை மகள் விதுலாஸ்ரீ எடுத்த போட்டோக்கள். இந்த காவல்துறை அதிகாரி கண்டிப்பா நகர் தெற்கு அல்லது நகர்வடக்கு காவல் நிலையமா இருக்கும்னு நினைக்குறேன். அதிகாரி அவர்களை நெஞ்சம் நிறைந்து வாழ்த்துங்கள்🙏🙏🙏

Tuesday, 20 April 2021

மதிப்பெண்களுக்காக பத்தாம் வகுப்பிற்கு பொதுவான தேர்வு என்பது வதந்தி - தமிழக அரசு


பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியாகும் தகவலில் துளியும் உண்மையில்லை: பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன்*

*இதுபோன்ற தகவலை வெளியிட்டு மாணவர்களை குழப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள்.*

பள்ளிகளில் உதவி தலைமை ஆசிரியரை நியமனம் செய்வது எவ்வாறு- கல்வித் துறை

வாய் புண் விரைவில் குணம் பெற உதவும் மருத்துவ குறிப்புகள்


தினமும் ஒரு கிளாஸ் தேங்காய்ப் பாலை கருப்பட்டி அல்லது பனை வெல்லம் கலந்து குடிக்க கொடுக்கலாம். வெறும் வயிற்றில் கொடுப்பது நல்லது. வீட்டில் தயாரித்த தேங்காய் பால் பாதுகாப்பானது. வாய் புண்ணில் மேல் தேங்காய் எண்ணெயைத் தடவலாம். தொடர்ந்து தடவி வந்தால் பலன் தெரியும். 


வீட்டில் தயாரித்த ஹோம்மேட் பசு நெய்யைத் தடவி வருவது நல்லது. நாளடைவில் குணமாகும்.மணத்தக்காளி கீரையை பாசிபருப்புடன் சேர்த்து, கொஞ்சம் தேங்காய்த் துருவல் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட கொடுக்கலாம். 


வாரம் 2-3 முறை கொடுப்பது நல்லது. ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தையாக இருந்தால், ஆர்கானிக், சுத்தமான தேனை புண்ணின் மேல் தடவலாம். 2 டீஸ்பூன் சாப்பிடவும் கொடுக்கலாம். சிறிதளவு மஞ்சளை சிறிது தேனுடன் கலந்து புண்களின் மேல் வைக்கலாம். 


இரண்டு டம்ளர் மோர் குடிக்க கொடுக்கலாம். ஒரு கப் தயிர் சாப்பிட கொடுக்கலாம். தயிர் சாதமாக, தயிர் கிச்சடியாக கொடுப்பதும் நல்லது. வாய்ப் புண் விரைவில் சரியாகும்.5-6 துளசி இலைகளைக் கழுவிய பின் மென்று தின்ன குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுப்பது நல்லது. காலை, மாலை சாப்பிட தரலாம். 


துளசி சாப்பிட்ட பின் இளஞ்சூடான தண்ணீர் கொடுக்கலாம்.கற்றாழையைத் தோல் நீக்கி, சதைப் பகுதியை நன்கு கழுவிய பின் அரைத்து புண்களின் மேல் தடவலாம். கற்றாழை, சிறிது பனை வெல்லம் சேர்த்து ஜூஸாக தினமும் வெறும் வயிற்றில் குடிக்க கொடுப்பது நல்லது. பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்ப்பதால் சளி பிடிக்காது.

Monday, 19 April 2021

தொழிற்சங்க பேராசான் Dr.அ.மாயவன் அவர்களும், மாநிலத் தலைவர் திரு.சு.பக்தவச்சலம் அவர்கள் இரண்டாவது தடுப்பூசி இன்று போட்டுக்கொண்டனர்.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கரூவூலங்களில் உடனடியாக ஊதியம் வழங்கக் கோரி சென்னை நந்தனத்தில் உள்ள மாநில கருவூல இணை இயக்குநரை சந்தித்து முறையீடு.


தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவர் *முனைவர் அ.மாயவன் அவர்களின்* வழிகாட்டுதலின்படி நம்பேரியியக்கத்தின் சார்பில் மாநில தலைவர் *S பக்ததவச்சலம* அவர்கள் தலைமையில் *சென்னை மாவட்ட நிர்வாகிகள்* இன்று *நந்தனம்* மாநில கருவூலகம் மற்றும் கணக்கு ஆணையரகம் இயக்குநர் மற்றும் இனை இயக்குநர் அவர்களை சந்தித்து தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மார்ச் மாதத்திற்கான ஊதியம் இன்றைய தேதி வரை பெற்று வழங்கப்படவில்லை. உடனடியாக ஊதியம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் ஊதியம் பெறுவதில் காலதாமதம் ஏற்படாதவாறு இருக்க நடவடிக்கை எடுக்கவும் நமது சங்கத்தின் சார்பில் கோரிக்கைமனு அளிக்கப்பட்டது.


Sunday, 18 April 2021

பண்ணைப் பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சமூக ஆர்வலர் விவேக் நினைவாக மரக்கன்று நட்டனர்.

*விதையாளர்* *விவேக்* நினைவாக *மரக்கன்று நடுவிழா* ஆசிரியப் பெருமக்கள் அரசு உயர்நிலைப்பள்ளிதேவரப்பன்பட்டி. வத்தலக்குண்டு கல்வி மாவட்டம்

நம் பேரியக்கத்தின் மேனாள் மாநிலப் பொருளாளர் KG.பாஸ்கரன் இல்லத் திருமண விழா


ஆடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மேனாள் மாநில பொருளாளர் கே ஜி பாஸ்கரன் அவர்களின் அருமைப் புதல்வன் கேஜி கிஷோர் குமார் அவர்களின் திருமண விழாவில் நம் பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் திரு.பக்தவச்சலம் அவர்கள் சென்னை மாவட்டத் தலைவர் திரு. சாந்தகுமார் அவர்கள்,செயலாளர் திரு.ஸ்ரீனிவாசன் அவர்கள், பொருளாளர் திரு தமிழ்வாணன் அவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.மேனாள் மாநில பொருளாளர்  திரு.கேஜி பாஸ்கரன் அவர்கள்

Thursday, 15 April 2021

கொரோனா மீண்டும் வேகம் எடுப்பதால் +2 பொதுத்தேர்வை ஒத்திவைக்கக்கோரிதமிழ்நாடு உயர்நிலை மேல்நி|லைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவர் *முனைவர்.அ. மாயவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாநிலப் பொதுச்செயலாளர் சா.சேது செல்வம் தினகரன் இதழுக்கு அளித்துள்ள பேட்டி

*+2 பொதுத்தேர்வை ஒத்திவைக்கக்கோரி*** தமிழ்நாடு உயர்நிலை மேல்நி|லைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவர் *முனைவர்.அ. மாயவன் அவர்களின்* வழிகாட்டுதலின்படி மாநில செய்தித் தொடர்புச் செயலாளர் திண்டுக்கல் மு.முருகேசன் இந்தியன் டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டி

*+2 பொதுத்தேர்வை ஒத்திவைக்கக்கோரி*** தமிழ்நாடு உயர்நிலை மேல்நி|லைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவர் *முனைவர்.அ. மாயவன் அவர்களின்* வழிகாட்டுதலின்படி மாநில செய்தித் தொடர்புச் செயலாளர் திண்டுக்கல் மு.முருகேசன் தினமலர் இதழுக்கு அளித்துள்ள பேட்டி

Sunday, 11 April 2021

நமது பேரியக்கத்தின் மேனாள் மாநில பொதுச் செயலாளரும், மாநில தேர்தல் ஆணையரும், சிறந்த எழுத்தாளருமான திருமிகு. சேது ஆனந்தன் அவர்களின் மகாபாரத நூல் வெளியீட்டு விழா இன்று சின்னமனூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க தேனி மாவட்டத் தலைவர் இதய நிலவன் வெளியிட தேனி மாவட்ட தலைவர் மோகன் பெற்றுக் கொண்ட நிகழ்வு....



நமது பேரியக்கத்தின் மேனாள் மாநில பொதுச் செயலாளரும், மாநில தேர்தல் ஆணையரும், சிறந்த எழுத்தாளருமான திருமிகு. சேது ஆனந்தன் அவர்களின் மகாபாரத நூல் வெளியீட்டு விழா இன்று சின்னமனூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க தேனி மாவட்டத் தலைவர் இதய நிலவன் வெளியிட தேனி மாவட்ட தலைவர் மோகன் பெற்றுக் கொண்ட நிகழ்வு....