Saturday, 27 February 2021
தமிழகத்தில் ஏப்ரல் 6- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்த சூழ்நிலையில், 28-02-2021 அன்று நடைபெற உள்ள ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு குறித்து ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அவசர கூட்டம் இன்று 27-02-2021 காலை நடைபெற்றது.* *இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு பின்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.**நாளை 28-02-2021 நடைபெற உள்ள ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் எதிர்வரும் மே மாதத்தில் ஜாக்டோ ஜியோ கோரிக்கை ஏற்பு மற்றும் உரிமைகள் மீட்பு தொடர்பான வெற்றி மாநாடு மிகப் பிரமாண்டமாக நடத்துவது என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.*இவண், மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
Friday, 26 February 2021
_*கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பலமுறை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆகியோரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டது இறுதியாக நமது பேரியக்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு தீர்ப்பு வருவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது என்பதை அனைவரும் அறிவர் இந்த ஆண்டும் தமிழக அரசு பொதுத்தேர்வு ரத்து செய்து அதற்கான அரசாணை*_
*🅱️REAKING NEWS..🛑 *ELECTION BREAKING* *சுனில் அரோரா*🛑 *80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தபால் வாக்கு கட்டாயமில்லை.* 🛑 *வேட்பு மனு தாக்கலுக்கு வர அதிகபட்சம் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதி* 🛑 *வாக்குப்பதிவு மையங்களில் இருக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி* 🛑 *தமிழகத்தில் தேர்தல் பார்வையாளராக தேவேந்திர குமார் ,அலோக் வர்தன் நியமனம்* 🛑 *தமிழகத்தில் 88,936 வாக்குச்சாவடிகள்.* 🛑 *விழாக்கள்,பண்டிகைகள் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு தேர்தல் தேதி அறிவிப்பு.* 🛑 *வாக்குப்பதிவு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கும்.* 🛑 *புதுச்சேரியில் தொகுதிக்கு ரூ 22 லட்சம் மற்ற 4 மாநிலங்களில். தொகுதிக்கு 30.8 லட்சம் தேர்தல் செலவு அனுமதி- அரோரா**
*மீண்டும் ஒரு வழக்கு* *03.03.2021 அன்று தீர்ப்பு* நம் பேரியியக்கத்தின் *நிறுவனர். Dr. அ.மாயவன் அவர்களின்* வழிகாட்டுதலின்படி நம் மாநில சட்ட செயலாளர். *திரு.பிச்சைக்கணி* அவர்கள் உட்பட்ட *ஐவர்* தொடர்ந்த வழக்கை தொடர்ந்துஇன்றுநம் பேரியியக்கத்தின் முன்னாள் மாவட்டத்தலைவரும் தற்போதைய மாநிலப் பொதுக்குழு உறுப்பினருமான. *தென்காசி* *திரு ச. ஐயப்பன்* அவர்கள், *அரசு பொதுமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்* என நேற்று 25/02/2021 *வழக்கறிஞர்* *திருமிகு லஜபதிராய் அவர்கள் மூலம் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் வழக்கு தொடுத்துள்ளார்
Thursday, 25 February 2021
Wednesday, 24 February 2021
*நம் பேரியியக்கத்தின் அடுத்த சாதனை* *பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த தடை - மதுரை உயர் நீதிமன்றம்* இன்று தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழக நிறுவனர். *Dr.அ.மாயவன் அவர்களின்* வழிகாட்டுதலின்படி நம் மாநில சட்ட செயலாளர் *திரு.பிச்சைக்கனி அவர்கள* து தலைமையில் ஐவரைக் கொண்டு *பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த கோரிய வழக்கு* இன்று விசாரணைக்கு வந்தது. நமக்காக. *வழக்கறிஞர் திருமிகு லஜபதிராய் அவர்கள் வாதிட்டார்கள்..* *தற்போது பட்டதாரி பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது* மேலும் அரசு வழக்கறிஞர்கள் தலைமை வழக்கறிஞர்களை கலந்து மீண்டும் தங்கள் கருத்தை தெரிவிக்க காலம் கேட்டதால் அரசு தனது கருத்தை தெரிவிக்க வழக்கு மீண்டும் நாளை மறுநாள் *26/02/2021 ல்* விசாரணைக்கு வருகின்றது.
Tuesday, 23 February 2021
*மருத்துவச் சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு (Medical Leave) - திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண். 6. பணியாளர் துறை. நாள். 22.01.2021ல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள்
1. விடுப்பு அனுபவிக்கும் நாளிலிருந்து ஏழு நாள்களுக்குள் விடுப்புக்கான விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டும்.
2. "A" மற்றும் "B" பிரிவு ஆசிரியர்/ அரசூழியர்கள் (அதாவது தர ஊதியம் ரூ. 4400ம் அதற்கு மேலும் அல்லது Level 13ம் அதற்கு மேலும் உள்ளவர்கள்) அரசு மருத்துவரிடம் சான்று பெற வேண்டும்.
3. "C" மற்றும் "D" பிரிவு ஆசிரியர்/ அரசூழியர்கள் (அதாவது தர ஊதியம் ரூ. 4400ம் குறைவாக அல்லது Level 12 வரை உள்ளவர்கள்) மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவரிடம் சான்று பெற வேண்டும்.
4. விண்ணப்பம் பெறப்பட்ட மூன்று தினங்களுக்குள் தேவைப்படின் மருத்துவக் குழுவிற்கு அனுப்பிட வேண்டும்.
5. மருத்துவக் குழுவுக்கு அனுப்பிடும் நேர்வில், அக்குழு வழங்கும் தகுதிச் சான்றின் அடிப்படையில் பணியில் சேர தவறும் பட்சத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, மருத்துவக் குழு அனுமதித்த நாள்கள் தவித்து மீதியுள்ள நாள்கள் பிற தகுதியுள்ள விடுப்பாக கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு-பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை நடத்தி விட்டு பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தக்கோரி
*மகிழ்ச்சியான செய்தி*
நமது தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர். *முனைவர்.அ.மாயவன்* அவர்களின் வழிகாட்டுதரின் படி நமது மாநில சட்ட செயலாளர் *திரு.பிச்சைக்கனி* அவர்களது தலைமையில் 5 ஆசிரியர்களைத் கொண்டு *மதுரை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை* பள்ளிக்கல்வித்துறை *நடத்திவிட்டு பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த வேண்டும்* மதுரை உயர்நீதிமன்ற *வழக்குரைஞர்.திருமிகு. லஜபதிராய் அவர்கள்* மூலம் *தடை கேட்டு* வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்கு வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த வாரம் விசாரணைக்கு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் *மாநிலக் கழகம்* தெரிவித்துக்கொள்கிறது.
தகவல்
திண்டுக்கல் மு.முருகேசன்
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
Monday, 22 February 2021
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் தற்போது ராமலட்சுமி பேரடைஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. நமது பேரியியக்கத்தின் நிறுவனத் தலைவர் முனைவர். அ.மாயவன் அவர்கள் கலந்துகொண்டு பிப்ரவரி 28ல் சென்னையில் லட்சக்கணக்கான ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் கூடும் வரலாற்றை புரட்டி போடும் அளவுக்கு சங்கமிக்கும் மாநாடு நடைபெறும் எனவும், அதில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களை அழைத்து CPS ரத்துக்கான கோரிக்கை மனுவை வழங்கப்படும் என முடிவு எடுத்திருக்கிறார்கள்.
திருவண்ணாமலைக்கு வருகை புரிந்த நமது சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு.எஸ்.பக்தவச்சலம் அவர்களை மாநிலத் துணைத்தலைவர் திரு. E. முருகன் அவர்கள் தலைமையில் சந்தித்து பேசினோம். உயர்நிலைபள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியருக்கே வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது. உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். PG பதவி உயர்வு வழங்கும்போது Same major / Cross major என்ற பழைய முறையே தொடர வேண்டும். ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். போராட்ட காலஊதியம்,DA, ஈட்டிய விடுப்பு ஒப்பளிப்பு, 21 மாத ஊதியநிலுவைத் தொகைகள் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் , செயலர் ஆகியோரை சந்தித்தித்து அழுத்தம் கொடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட பொருளாளர் திரு.R.சிவராஜ், மாவட்டச்செய்தி தொடர்பாளர் திரு.D.சிவக்குமார் மாவட்டத் துணைத்தலைவர் திரு.R. திருமலை,மாவட்ட இணைச்செயலாளர் திரு.S.தயாளன், திருவண்ணாமலை வட்டத் தலைவர் திரு.மோகன்ராஜ், கீழ்பென்னாத்தூர் வட்டத் தலைவர் திரு.சக்திவேல், கீழ்பென்னாத்தூர் வட்ட பொருளாளர் திரு.பாஸ்கரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.ஆர்.மண்ணு. மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரு.எம்.கணபதி ஆகியோர் கலந்துகொண்டு தக்க ஆலோசனைகளை வழங்கினர்.💐💐💐தோழமையுடன். M..ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், திருவண்ணாமலை மாவட்டம்.
Sunday, 21 February 2021
👇🏼👆🏽💐🙏மூக்கிரட்டை மருத்துவப் பயன்கள்:-1.மூக்கிரட்டை செடி, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை, முழுவதும் வெளியேற்றி, மனிதர்களின் உடல் நலம் காக்கும் வல்லமை பெற்றதாகத் திகழ்கிறது.2. மூக்கிரட்டை உடலில் இறங்கும்போது, அங்கே, வாத வியாதிகள் எல்லாம், அடங்கி, வாதம் உடலில் சீராகும். இரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம், மூச்சிரைப்பைப் போக்க, கல்லீரல், மஞ்சள் காமாலை பாதித்தவர்களின் வயிற்று உப்புசம் குறைந்து நச்சு நீர் வெளியேற, மூக்கிரட்டை உதவி செய்யும்.3.புற்று நோய்கள் புற்று வியாதிகளை ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழிக்கும், தொற்று வியாதிகளின் பாதிப்பை சரி செய்யும், உடல் திசுக்களை சரி செய்து, உடலில் ஏற்படும் முதுமைத் தன்மையை போக்கி, உடல் இளமையை தக்க வைக்கும்.4.மூளைக்கு ஆற்றலை அளித்து, உடலுக்கு சுறுசுறுப்பையும், மனதிற்கு உற்சாகத்தையும் உண்டாக்கும்.மூக்கிரட்டை இலைகள், பொன்னாங்கன்னி இலைகள் மற்றும் கீழாநெல்லி இலைகள் ஆகியவற்றை ஒரே அளவில் எடுத்துக் கொண்டு, அவற்றை நன்கு அரைத்து, சிறிதளவு மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர, கலங்கலான பார்வை மற்றும் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் விலகி, கண் பார்வை, தெளிவாகும்.5.மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மிளகு, சீரகம், திப்பிலி இவற்றை சமமாக எடுத்துக் கொண்டு, தூளாக்கி, தினமும் இரு வேளை தேனில் கலந்து உண்டு வர, உடல் எடை குறைந்து, உடல் வனப்பு மிகுந்து காணப்படும்.6.மூக்கிரட்டை சமூலம் எனும் முழுச் செடியையும் உலர்த்தி, தூளாக்கி, தினமும் இரு வேளை, சாப்பிட்டு வர, மலச்சிக்கல் நீங்கி உடல் புத்துணர்வாகி, இளமைப்பொலிவுடன் காணப்படும்.7.மூக்கிரட்டை இலைகளை சுத்தம் செய்து சமைத்து சாப்பிட்டு வர, சுவாச பாதிப்புகள் சரியாகும்.மூக்கிரட்டை வேர்கள் சற்று நீளமாக, சிறிய மரவள்ளிக் கிழங்கு போல காணப்படும். இரத்தச் சோகை, இதய பாதிப்புகள் போன்ற வியாதிகளுக்கு, சிறந்த மருந்தாகிறது. மூக்கிரட்டை வேரை நீரில் இட்டு ஆற வைத்து பருகி வர, இரத்த சோகை, சளித் தொல்லை நீங்கும்.8.மூக்கிரட்டை வேரை சற்று இடித்து, விளக்கெண்ணையில் இட்டு காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் பருகி வர, வயிற்றுப் போக்கு ஏற்படும். இதன் மூலம், உடலில் சேர்ந்து இருந்த நச்சு நீர், நச்சுக்கிருமிகள் யாவும் மலத்துடன் வெளியேறி விடும். இதுநாள் வரை இந்த நச்சுக்களால், உடலில் ஏற்பட்டிருந்த சரும வியாதிகள், அரிப்பு மற்றும் வாதம் சார்ந்த வியாதிகள் அனைத்தும் சரியாகி விடும்.9.உடலில் வியாதிகளால் ஏற்பட்ட நச்சு நீரால், சளியும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, அவை தினசரி இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். இதை சரி செய்ய, முன் சொன்ன முறையில் காய்ச்சிய மூக்கிரட்டை வேர் நீரில், சிறிது மிளகுத்தூள் கலந்து பருக, மூச்சுத் திணறல் பாதிப்புகள் சரியாகி விடும்.10 இந்த மருந்தை எடுக்கும் போது, மலக்குடலை சுத்தம் செய்யும் மூக்கிரட்டை வேரின் தன்மையால் மலம் இளகி, வயிற்றுப்போக்கு ஏற்படும், இதனால் பாதிப்பில்லை, உடலுக்கு நன்மைதான் உண்டாகும்.வாழ்க வளமுடன்
Friday, 19 February 2021
*பொதுத்தேர்வு* செல்லும் *மாணவர்களுக்கு* குறைக்கப்பட்ட பாடப் பகுதிகளிலிருந்து *பெற்றோர்ஆசிரியர்* *கழகம்* மூலம் வினாவங்கி் தயாரித்துக் கொடுக்கக் கோரியும், மாணவர்களுக்கு எளிய முறையில் கேள்வித்தாள்கள் அமைக்கக் கோரி தமிழக அரசுக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை விடுத்த செய்தி இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில்...
Thursday, 18 February 2021
உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்
உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் மூத்த பட்டதாரி ஆசிரியருக்கு மட்டுமே வழங்க வேண்டும் - பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் அரசுக்கு கோரிக்கை https://public.app/s/Mr3sE
பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் மாபெரும் அநீதியை மாண்டபுமிகு.பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர் *Dr.அ.மாயவன்* அவர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் அனுப்பப்பட்ட கடிதம் (உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் உட்பட)
Wednesday, 17 February 2021
மருத்துவ விடுப்பு ஒரு ஆசிரியர் எடுக்கும் பட்சத்தில் மருத்துவ விடுப்பு எடுத்ததற்கு ( 17 நாள் MLக்கு 1 நாள் EL என) ஈட்டிய விடுப்பு நாட்களை கழிக்க கூடாது , மருத்துவ விடுப்பு என்பது ஊதியத்துடன் கூடிய விடுப்பு . சம்பளமில்லா விடுப்பு எடுத்தால் மட்டுமே ஈட்டிய விடுப்பு கழிக்கப்பட வேண்டும் என்பதற்கான முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்
Subscribe to:
Posts (Atom)