கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Saturday, 30 June 2018

பள்ளிக்கல்வி இயக்குநராக திரு.ராமேஸ்வர முருகன் அவர்கள் நியமிக்கப்பட்டார்.

பள்ளிக்கல்வி இயக்குநராக திரு.ராமேஸ்வர முருகன் அவர்கள் நியமிக்கப்பட்டார்.திரு.இளங்கோவன் அவர்கள் இன்று ஓய்வு பெற்றதை அடுத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

Friday, 29 June 2018

இயக்குநர் அறிவிப்பு-ஆசிரியர்களுக்கு பயிற்சி-1,6,9,11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி அளிக்க செயல்முறைகள்

இயக்குநர் அறிவிப்பு-ஆசிரியர்களுக்கு பயிற்சி-1,6,9,11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி அளிக்க தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு செயல்முறைகள்  பிறப்பித்தார்

M.PHIL முன்அனுமதி மற்றும் பின்னேற்பு வழங்கும் அதிகாரம் இனி முதன்மைகல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

*திருத்திய சுற்றறிக்கை*

உயர்கல்விக்கான M.PHIL முன் அனுமதி மற்றும் பின்னேற்பு வழங்கும் அதிகாரம் இனி மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகளுக்கு 01.06.2018 முதல் வழங்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்...இணை இயக்குநர் அவர்களிடம் வந்துள்ள அனைத்து முன்னேற்பு மற்றும் பின்னேற்புகள் அனைத்தும் அந்தந்த மாவட்டங்களுக்கு திருப்பி அனுப்பப்படும்.ஆகவே  மாவட்ட கழக உடன்பிறப்புக்கள் ஆசிரிய பெருமக்களுக்கு அனுமதிகள் கிடைக்க மாவட்ட முதன்மைகல்வி அலுவலகங்களை நாடவும்.

மாவட்டத்தில் சிரமங்கள் மற்றும் தேவைகள் ஏற்படின் மாநில கழகத்தை தொடர்புகொள்ளவும்...

       *Dr.அ.மாயவன் நிறுவனர்*
       *சு.பக்தவச்சலம் மாநிலத் தலைவர்*

மு.முருகேசன்
*மாநில செய்தி தொடர்பு* *செயலாளர்*

Thursday, 28 June 2018

மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அவர்கள் 30.06.2018 அன்று ஓய்வு...நிறுவன தலைவர் அ.மாயவன் அவர்கள், மாநிலத்தை தலைவர் பக்தவச்சலம் அவர்கள் மரியாதை...

மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அவர்கள் 30.06.2018 அன்று ஓய்வு பெருவதையொட்டி நம் நிறுவனத்தலைவர் அ.மாயவன் அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்..உடன் மாநில தலைவர் திரு.சு.பக்தவட்சலம் அவர்கள்,சென்னை மாவட்ட பொருளாளர் திரு.தமிழ்வாணன் அவர்கள்

Tuesday, 26 June 2018

பட்டதாரி ஆசிரியர்களின் உரிமையை பாதுகாக்கும் தலைவர்- அ.மாயவன் அவர்கள்

பட்டதாரி ஆசிரியர்களின் உரிமையை நிலைநாட்டும் பாதுகாப்பு கேடயம்   அ.மாயவன் அவர்கள்....

🌹நான் பார்த்த தொழிற்சங்கவாதிகளிலே மிகவும் எளிமையானவர்

🌹 *பட்டதாரி ஆசிரியர்களுக்கென தனி சங்கம் இல்லாமல் நமது உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த நேரத்தில் 2000 ஆண்டு பட்டதாரி ஆசிரயர்களுக்கென தனி சங்கத்தை கட்டமைத்த பெருமை  அ.மாயவன் அவர்களையே சாரும்*

🌹ஓய்வு பெற்ற பிறகு பட்டதாரி ஆசிரியர்களின் உரிமையை நிலைநாட்ட ஒருநாளைக்கு 100-700 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும் நிறுவனர் அவர்களுக்கு  ஒரு மகிழுந்து பரிசளிக்கப்பட்டது​

🌹 *ஆனால் தற்போது வரை நிறுவனர் அ.மாயவன் அவர்கள் பயணம் மேற்கொள்வது அரசு பேருந்து மற்றும் தொடர்வண்டி மட்டுமே*

Monday, 25 June 2018

11,12ஆம் வகுப்பு வினாத்தாளில் 20 விழுக்காடு Creative கேள்விகள் : மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை

11 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் 20 விழுக்காடு வினாக்கள் சிந்தனை மற்றும் உயர் திறன் சார்ந்து சிந்தித்து விடையளிப்பவையாக இருக்கும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கு வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலையில், புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்கள், கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாக்கள், மற்றும் பாடம் சார்ந்து கேட்கப்படும் உயர்திறன் சார்ந்த சிந்தித்து விடையளிக்கும் வகையில் அமையும் வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் மாணவர்களை ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு கேள்வித் தாள் நடைமுறையில் மாற்றமில்லை.

Saturday, 23 June 2018

1,200 அரசு பள்ளிகளை இணைக்க திட்டம்:தகவல் சேகரிப்பில் கல்வித்துறை தீவிரம்!!

சேர்க்கை குறைவாகவுள்ள, 1,200 அரசுப் பள்ளிகளை இணைக்க, தொடக்க கல்வித்துறை தகவல் சேகரித்து வருகிறது

. அத்துடன்,, அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை,, காலியிடங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில், தொடக்க கல்வி இயக்ககத்தில் செயல்படும், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வருகிறது. நடப்பாண்டு, புதிய மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி மாணவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது. 

அதன் இயக்குனர் கருப்பசாமி உத்தரவுப்படி, 10க்கும் குறைவாகவுள்ள மாணவர்கள், படிக்கும் பள்ளிகள் பட்டியல் திரட்டப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், போதிய கற்பித்தல் பணிகளின்றி சம்பளம் பெறுகின்றனர்.

இதனால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய, பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, இணைக்கப்பட வேண்டிய பள்ளிகள், ஆசிரியர்களின் விபரங்களை திரட்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், மாவட்ட செயலாளர் முருகவேள் கூறியதாவது: தமிழகத்தில், 37 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 20 மாணவர்களுக்கு குறைவாக, 890 பள்ளிகள் உள்ளதாக, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தற்போது, 10 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பள்ளிகளின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது

புதிய பள்ளியில் பணியேற்பார் ஆசிரியர் பகவான்...முதன்மைகல்வி அலுவலர் அறிவிப்பு

திருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவரது காலை பிடித்து கொண்டு கண்ணீர்விட்டு கதறியது அனைவரையும் உருக வைத்துவிட்டது.

இடமாறுதல் ரத்தாகுமா என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரனிடம் கேட்டதற்கு, ``மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்தான் வெளியகரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்தது. இதனால்தான் அவர்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர். கவுன்சலிங் மூலம் அவர்களுக்குப் புதிய பள்ளியில் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆங்கிலப் பாடத்தைக் கற்பிக்க ஆசிரியர் உள்ளார். மாணவ, மாணவிகள் போராட்டத்தால் ஆசிரியர் பகவான் உடனடியாக விடுவிக்கப்படவில்லை. மாணவ, மாணவிகளை சமரசப்படுத்திவிட்டு அவரை அங்கிருந்து விடுவிக்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளோம். அதற்காக மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் பேசிவருகின்றனர். இதனால், இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான், கவுன்சலிங்கில் தேர்வு செய்த அருங்குளம் பள்ளிக்கு இடமாற்றப்படுவார். ஆசிரியை சுகுணா, ஏற்கெனவே இடம் மாற்றம் செய்யப்பட்டுவிட்டார். மேலும், பள்ளிக்கல்வித்துறையின் விதிப்படிதான் இடமாறுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

Friday, 22 June 2018

முருகானந்தம் பணியிடமாற்றம் ரத்து நெல்லையில்...ஊர்பொதுமக்கள் மறியல் செய்து தக்கவைத்தனர். 5 ஆண்டுகளுக்கு முன்.

ஆசிரியர்களே ஐந்தாண்டுகளுக்கு முன்பு தற்போதைய நெல்லை மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைமையிடத்து செயலாளர்  திரு முருகானந்தம் அவர்களை பணியிடமாற்றம் செய்த போது அந்த ஊர் பெற்றோர்கள் மறியல் வரை சென்று அவரை போராடி அதே பள்ளியில் தக்க வைத்தனர்.

      அவரை நேற்று புதிய தலைமுறை டிவியில் விவாத மேடை நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தனர்..அந்நிகழ்ச்சில் பங்குபெற்றபோது

அரசாணை எண்: 77 P & AR நாள்: 20.06.2018 - முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தால், இரண்டாவது பிரவசத்திற்கு, தாய் மகப்பேறு விடுப்பு எடுக்க தகுதியாவார் அரசு ஆணை வெளீயீடு

அரசாணை எண்: 77 P & AR நாள்: 20.06.2018 - முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தால், இரண்டாவது பிரவசத்திற்கு,  தாய் மகப்பேறு விடுப்பு எடுக்க தகுதியாவார் அரசு ஆணை வெளீயீடு

Friday, 15 June 2018

CPS க்காக போராடிய தலைவன் அ.மாயவன் கைது

தானைத் தலைவன் ஆசிரியர்களின் பாதுகாவலன், தொழிற்சங்க பேராசான் அ.மாயவன் கைது செய்யப்பட்டு போலிஸ் வேனில் ஏற்றிசென்ற போது

Monday, 11 June 2018

காவல் தெய்வம் ஒன்றும் சாப்பிடாமல் படுத்து உறங்குறார்

*நம்முடைய காவல் தெய்வம்* காலையில் இருந்து பட்சத் தண்ணி கூட குடிக்காமல் இந்த வயதான காலத்தில் படுத்து உறங்குகிறது....பொய்யல்ல ஒன்றுமே சாப்பிடாமல் பந்தலில் சாய்ந்து இருக்கிறார்....அருமை பட்டதாரி சொந்தங்களே கண்கலங்குறது.....

உணர்விருந்தால் நாளை ஆர்ப்பாட்டதிற்கு வாருங்கள்... அருமை தலைவன் ex.mlc....பேருந்திலிருந்து, ட்ரெயின் முதல் விமானம் வரை சொகுசாக பயணம் செய்ய அனைத்தும் இலவசம்...MLC அதாவது MLA கூறிய பென்ஷன் அனைத்தும் அவருக்கு உண்டு....

நான் பெற்று பயனை நம் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பெற வேண்டுமே என்ற ஒரே ஆசை.....

இன்று நமக்காக சுகர் மாத்திரை கூட போடாமல் போராடுகிறார் சாப்பிடாமல்.....அருமை தங்க்த்துக்காகவாது...

நீங்கள் மாலை நேரத்தில் நடக்கும் ஆர்பாட்டத்தில் ஒரு மணிநேரம் பங்குபெற வேண்டாமா.....

நீங்கள் மாவட்ட தலைநகரில் கூடினால் தானே....அரசு அழைத்து பேசும்......

கால வரையற்ற உண்ணாவிரதத்தால்....அவர்களை இழக்க வைத்துவிடாதீர்கள்.....

போராட்டம் முடிவுக்கு வரப்போகிறது....கோரிக்கை வென்றெடுக்க மனசு என்று இருந்தால் நாளை மாலை சங்கமிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வாருங்கள்......

இந்த தெய்வத்தை பார்த்தாவது......பட்டதாரி சொந்தங்கள் வந்து சேருங்கள்.......

என்றும் உங்கள் நலனில்.....
மாநில கழகம்.....

இவண்
மு.முருகேசன் மாநில செய்தி தொடர்பு செயலாளர்
TNHHSSGTA-

ஓயாத உழைப்பாளி அ.மாயவன்.... காலவரையற்ற உண்ணாவிரதத்தில்

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவரும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான *அ.மாயவன் அவர்கள்* காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்....அவரை பலர் வலியுறுத்தியம் உண்ணாவிரத பந்தலை விட்டு வெளியே செல்லவில்லை... வைராக்கியதுடன் அரசு அழைத்துப்பேசும் வரை போகமாட்டேன் என்று ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறார்.சிலர் நம் இயக்கத்தின் வளர்ச்சியை தாங்க முடியாமல் அவர் வெளியே சென்றுவிட்டார் என பொய் பரப்புரை செய்து வருக்கின்றனர்.சுயநலவாதிகள் அவரின் செயலுக்கு மதிப்பு அளிக்காமல் .......

அருமை பேரியக்க உடன்பிறப்புக்களுக்களே......

நமக்காக போராடும் தலைவனுக்காக  நம் இயக்க உடன்பிறப்புக்கள்   மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு நாளை செவ்வாய் கிழமை மட்டும் 5.30 யிலிருந்து 7 மணிக்குள் வருகை தருமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்....

மாநில தலைவர் சு.பக்தவச்சலம் அவர்களும்,பொது செயலாளர் கோவிந்தன் அவர்களும் உண்ணாவிரத பந்தலில் இருக்கின்றார்கள்.....

நம் கோரிக்கை நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டது.....

உணர்வுக்கு மதிப்பு அளித்து வாருங்கள்.....

புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை மாநகராட்சி முன் மணிகூண்டு அருகில் நடைபெறும்......

மு.முருகேசன்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
ஜாக்டோ ஜியோ
       
மற்றும்

மாநில செய்தி தொடர்பு செயலாளர்
TNHHSSGTA-DGL

உண்ணாவிரதத்தில் இரவிலும் Dr. அ.மாயவன்

மாநில ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன் அவர்கள் உண்ணாவிரத பந்தலை விட்டு வெளியே செல்லவில்லை.....தானை தலைவனை எவ்ளோ வலியுறுத்தியும்,அவர் cps நிறைவேறும் வரை உண்ணா விரத பந்தலிலே இருப்பேன் என்று ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறார்......பொய்யான தகவலையும், வதந்திகளையும் பேசி இன்பம் காணும் சுயநலவாதிகள்....அவரின் செயலுக்கு மதிப்பு அளிக்கவேண்டும்.......

மு.முருகேசன் மாநில செய்தி தொடர்பு செயலாளர்
TNHHSSGTA-STATEBODY

Sunday, 10 June 2018

ஜாக்டோ ஜியோ....சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம்

ஜாக்டோ ஜியோ....சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம்....நாலைமுதல்

Dr.அ.மாயவன்
மாநில ஒருங்கிணைப்பாளர்

திருவாரூர் மாவட்ட தலைவர் தலைமையில் பணிநிரவலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட தலைவர் தலைமையில் பணிநிரவலை கண்டித்து மாநிலம் தழுவிவ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்ட தலைவர் தலைமையில் பணிநிரவலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட தலைவர் தலைமையில் பணிநிரவலை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

Saturday, 9 June 2018

உயர்நிலை, மேல்நிலை ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் திருத்தம்

உயர்நிலை, மேல்நிலை ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் திருத்தம்

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடைமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில், நடப்புகல்வியாண்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்தப்பட்டு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைஉள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளும், ஒரே நிர்வாகத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில், தொடக்கக்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு தனித்தனியே இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.நடப்பு கல்வியாண்டில், ஒருங்கிணைக்கப்பட்ட கவுன்சிலிங், ஜூன், 11ல் தொடங்குகிறது.

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, வருவாய் மாவட்டத்துக்குள் இடமாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் என, கவுன்சிலிங் நடத்தப்படுவது வழக்கம். நடப்பு கல்வியாண்டுக்கான கவுன்சிலிங் நடைமுறையில், இது மாற்றியமைக்கப்பட்டு, கல்வி மாவட்டத்துக்குள் இடமாறுதல், கல்வி மாவட்டம் விட்டு, கல்வி மாவட்டம் இடமாறுதல் என அமல்படுத்தப்பட்டது. 

 

இதனால், கிராமப்பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள், நகர்ப்பகுதிகளுக்கு, இடமாறுதல் பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனக்கூறி, ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், கவுன்சிலிங் நடைமுறையில், திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, வழக்கம் போல், வருவாய் மாவட்ட அளவில், கவுன்சிலிங் நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அலட்சியப்படுத்தாமல் பேச்சு நடத்த வேண்டும்!..அன்புமணி இராமதாஸ்

*அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் பேச்சு நடத்த வேண்டும்!*

*- பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை.*

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு அடுத்தக்கட்டமாக நாளை மறுநாள் முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தமிழக ஆட்சியாளர்கள் ஆண்டுக்கணக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அரசு ஊழியர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினால், அவர்களை அழைத்து பேச்சு நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதும், நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளாக இருந்தால் அவை குறித்து அரசு ஊழியர் சங்கத்தினரிடம் விளக்கி சமரசம் செய்வது தான் வழக்கமாகும். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்துவதற்கு பதிலாக அவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்; தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்; அரசு பணியிடங்களை குறைப்பது குறித்து பரிந்துரைப்பதற்கான குழுவை கலைப்பதுடன், அரசு பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும் ஆகிய 5 கோரிக்கைகளை முன்வைத்து தான் அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராடி வருகிறது. இந்த கோரிக்கைகள் அனைத்தும் மிகவும் நியாயமானவையாகும்.

ஆனால், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் தமிழக அரசுக்கு கொஞ்சமும் இல்லை. மாறாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து அரசு ஊழியர்களை ஏமாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. உதாரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார்.

எனினும், ஐந்தாண்டு ஆட்சியில் அத்திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத ஜெயலலிதா, 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்கள் முன்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்தார். 6 மாதங்களில் அக்குழு அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், 30 மாதங்களாகியும் அந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. அதுமட்டுமின்றி அக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற இ.ஆ.ப. அதிகாரி ஸ்ரீதர் நியமிக்கப்பட்டு அதன் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்து விட்ட நிலையில் அக்குழு இப்போது செயல்பாட்டில் உள்ளதா? என்பது கூட தெரியவில்லை. இக்குழுவின் அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், கண்டனம் தெரிவித்தும் அதை தமிழக ஆட்சியாளர்கள் இன்னும் செவிமடுக்க வில்லை. இது எந்த வகையில் நியாயம்?

மற்ற கோரிக்கைகள் குறித்தும் பேச்சு நடத்த அரசு தயாராக இல்லை. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கடந்த மாதம் 5-ஆம் தேதி போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை அழைத்து பேச மறுத்து விட்ட தமிழக அரசு அமைச்சர் ஜெயக்குமார் பெயரில் ஊடகங்களில் விளம்பரம் வெளியிட்டது. அரசு ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுப்பதால் தான் அரசு கடன் சுமையில் சிக்கியிருப்பதைப் போன்றும், அதனால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்றும் அந்த விளம்பரத்தில் அரசு கூறியிருந்ததை ஏற்க முடியாது. அதுமட்டுமின்றி, தலைமைச்செயலகத்தை முற்றுகையிடச் சென்ற அரசு ஊழியர்களை பயங்கரவாதிகளாகக் கருதி கடற்கரைச்சாலையில் பல இடங்களில் கம்பி முள்வேலித் தடுப்பு அமைத்து தடுத்தது. பல இடங்களில் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்களை கைது செய்தது.

அதன்பிறகாவது அரசு ஊழியர்களை அழைத்து தமிழக அரசு பேசியிருக்க வேண்டும். ஆனால், சர்வாதிகார மனப்போக்குடன் தமிழக அரசு நடந்து கொள்வதால் தான் அதைக் கண்டித்து, நாளை மறுநாள் முதல் சென்னையில் சங்க நிர்வாகிகள் காலவரையற்ற உண்ணாநிலையும், மாவட்டத் தலைநகரங்களில் மாலைநேர ஆர்ப்பாட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஓர் அரசாங்கத்தின் முகமாக இருக்கும் அரசு ஊழியர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் நிலை நிலவுவதே அரசுக்கு அவமானம் ஆகும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்திற்கு பா.ம.க. முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. அரசு ஊழியர்களின் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாக அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை தவிர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

*செய்தி மற்றும் தகவல் பகிர்வு ➤ #செய்திக்கதிர் வாட்ஸ்ஆப் குழு +919842940657*