கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Friday, 21 May 2021

ஆவின் பால் விலை குறைத்த பின், கூடுதலாக விற்பனை செய்த 11 சில்லறை விற்பனையாளர்களின் உரிமம் ரத்து..!தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். கூடுதல் விலைக்கு பால் விற்பது தெரியவந்தால் நடவடிக்கை. அமைச்சர் நாசர் அறிவிப்பு*


நாமக்கலில் கொரோனா பேரழிவிலிருந்து காப்பதில் சித்தா, ஆயுர்வேதிக், ஹோமியோபதி மருத்துவர்கள் பங்கேற்ற கருத்தரங்கு -

*தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிர கழகம்*
 *நாமக்கல் மாவட்டம்*

 *நன்றி அறிவிப்பு*

 இன்று நடைபெற்ற கொரோனா பேரழிவிலிருந்து நம்மை காப்பதில் சித்தா, ஆயுர்வேதிக், ஹோமியோபதி மருத்துவத்தின்  பங்களிப்பு என்ற கருத்தரங்கில் மூன்று துறையைச் சார்ந்த மருத்துவர்கள்


 கலந்து கொண்டு மிகச் சிறப்பானதொரு கருத்துக்களை வழங்கினார்கள்.

   கொரோனா நோயை ஆரம்ப நிலையிலேயே இந்த மூன்று மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த முடியும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

 இந்த கருத்தரங்கில் சுமார் 90க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். 

குறிப்பாக குடியாத்தம், வேலூர், கோவை பகுதிகளிலிருந்தும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.

 அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

 நமது மாவட்ட ஆசிரியர் அலுவலர் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிக குறைவானது.


 கொரோனா அரக்கனால் நாள்தோறும் உயிரிழப்புகள் நம் ஆசிரியர் சமுதாயத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது சம்பந்தமாக விழிப்புணர்வை  ஏற்படுத்த நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் குறிப்பாக மூன்று துறைகளின் மருத்துவ பெருமக்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

க.செ. பாலகிருஷ்ணன்,
 மாவட்ட தலைவர்

க. அருள்செல்வன்,
 மாவட்ட செயலாளர்
பெ. குணசேகரன்,
 மாவட்ட பொருளாளர்.

 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்.
 நாமக்கல் மாவட்டம்.

பள்ளிக்கல்வித் துறை ஆணையர் பணியிடம் எதிர்பார்ப்பும்-எதிர்ப்பும் (நம்பேரியியக்கம் எதிர்ப்பு)

4 மாதமாக சம்பளம் பெறாத ஆசிரியர்கள்-35 தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு

கொரோனா ஊரடங்கில்-நெகில வைத்த சம்பவம் - மாநில சட்ட செயலாளர் சாமி கண்ணீர் -ஆதரவற்றோர் ஒருநாள் காரக்குழம்பு, சாம்பார். பொறியல் அப்பளம்|பாயாசம்னு சாப்பாடு கொடுப்பீங்களா


*திருவள்ளூரில்*
*சாலையோரம் கிடக்கும்* *ஆதரவற்ற* *முதியோர்களுக்கு மதிய உணவு*

திருவள்ளூரில் சாலையோரம் கிடக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு நமது பேரியக்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.

கரோனா பொது முடக்கத்தின் காரணமாக திருவள்ளூரில் சாலையோரங்களிலும், கோவில்களின் அருகிலும் இருக்கும் ஆதரவற்ற முதியோர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

 இதுபற்றி அறிந்ததும் *தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் அ. மாயவன் எக்ஸ்எம்எல் சி அவர்கள் வழிகாட்டுதலின்படி* திருவள்ளூர் மாவட்ட தலைவர் கே. ஜெயராமன், மாவட்ட செயலாளர் ஈ.அருள் மாவட்ட பொருளாளர் டி. தணிகாச்சலம், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் டி. பாஸ்கர், மாவட்ட சட்ட செயலாளர் என். பிரேம்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன், மகளிர் அணி நிர்வாகிகள் தேன்மொழி சுமதி ,செல்வகுமாரி , பாரதி, சித்ரா, ஆயிஷாபேகம், செல்வி, சீலி ஆகியோர் சார்பில் மாநில சட்ட செயலாளர் ஆர்.கே.சாமி அவர்கள் மதிய உணவு வழங்க திட்டமிட்டிருந்தார்.

 அதன்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் திருவள்ளூர் ஈஸ்வரன் திருக்கோயில்,  விநாயகர் கோயில்,  ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில்,  தேரடி, காக்களூர் ஏரிக்கரையில் உள்ள பாதாள விநாயகர் கோயில் அருகில் இருந்த 25 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

உணவு பெற்றுக் கொண்ட அனைவரும் ஆசிரியர் சமுதாயத்துக்கு கைகூப்பி  நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

அர்ஜுனா ஓட்டல் எதிரே படுத்திருந்த இரண்டு மூதாட்டிகளுக்கு உணவு வழங்க சென்றபோது, அதில் ஒரு மூதாட்டி எனக்கு பசி எடுக்க வில்லை பிறகு வாங்கிக் கொள்கிறேன் என கூறியது மனதை நெகிழ வைத்தது. அந்த ஒரு ஜான் வயிறு பசிக்க வில்லை எனில் வேண்டாம் என்ற சொல்லும் மனசும் அந்த மூதாட்டியிடம் காணப்பட்டது.

 அதேபோல் இன்னொரு மூதாட்டியை அம்மா ..அம்மா... அப்பா என்று அழைத்தும் அவர் எழுந்திருக்கவே இல்லை.

  சாலையோரத்தில்  இருப்பவர்களிடம் நெருங்கும் போதுதான் அவர்களுடைய நிலைமை என்ன என்று நமக்கு புரிகிறது. 

அதேபோன்று ஒருசிலர்  எங்களுக்கு சாப்பாடு, சாம்பார் ,காரக்குழம்பு, ரசம், மோர், பொரியல்,கூட்டு அப்பளம் ஆகியவற்றை ஒரு நாளைக்கு  வாங்கி தருவீர்களா? சாப்பிட ஆசையாக இருக்கிறது என்று குழந்தைகள் போல கெஞ்சியது நமது மனதை உலுக்கியது.

 இப்படி கேட்ட அவர்களுக்கு இன்னொரு நாள் அவர்கள் விரும்பிய சாப்பாட்டை கண்டிப்பாக வாங்கி தருகிறோம் என  உறுதி அளித்து அந்த உணவை வாங்கி தர வேண்டும், அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஏக்கத்துடன் வீடு திரும்பினோம்.

Sunday, 16 May 2021

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் வழங்கிய சென்னை மாநகராட்சி பள்ளி பட்டதாரி ஆசிரியை *திருமதி ரூபி புகழேந்தி

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு  *ஒரு லட்சம்* வழங்கிய *சென்னை மாநகராட்சி மேல்நிலை பள்ளி பந்தர்கார்டன்ல்* பணியாற்றும் பட்டதாரி ஆசிரியை *திருமதி ரூபி புகழேந்தி* அவர்களுக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் *(TNHHSSGTA)* வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏

Wednesday, 12 May 2021

சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு.மா. சுப்பரமணியனை நம் பேரியியக்கத்தின் மாநிலத்தலைவர்.திரு.சு.பக்தவச்சலம் உள்ளிட்ட சென்னை மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை அளிப்பு



*தமிழ்நாடு உயர்நிலை* - *மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்* .
=================================
 *நிறுவனர் Dr.அ. மாயவன் Ex.MLC* 
=================================

 *நாள் :13.05.2021*
 *மாண்புமிகு சுகாதாரதுறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்களை*  நம் பேரியக்கத்தின் நிறுவனர் முனைவர் 
*அ. மாயவன் Ex.MLC* அவர்களின் வழிகாட்டுதலின் படி இன்று   மாநிலத்தலைவர் *திரு.S.பக்தவச்சலம்* தலைமையில் 
மாவட்ட தலைவர் *திரு.கா.சாந்தகுமார்*, மாவட்ட செயலாளர் *திரு.அ.சீனிவாசன்*
 மற்றும் சென்னை மாவட்ட செய்தி தொடர்பாளர் 
*திரு. கோ.குமார்*, மாவட்ட துணைத்தலைவர் *திரு. மோகன்*,  ஆகியோர் இன்று  காலையில் சந்தித்து இயக்கத்தின் சார்பில் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
*ஜாக்டோ ஜியோ எடுத்த முடிவின் படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடத்தம் செய்ய விரைந்து அரசாணை பிரபக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது*

    *கொரோனா தொற்றில் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் காப்பிட்டு திட்டத்தில் கொடுக்கப்பட்டது போல் NHIS திட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் எந்த மருத்துவ மனையிலும்  இலவசமாக சிகிச்சை பெற உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.*

    *பெருவாரியான தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆசிரியர்கள்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மரணமடைந்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் வீட்டிலும் மருத்துவமணைகளிலும் சிகிச்சை பெற்று கொண்டிருக்கிறார்கள். ஆகவே ஆசிரியர்களை  (TTC) கொரோனா தடுப்பு பணிக்கு கட்டாயபடுத்தாமல் விருப்பமுள்ளவர்களை பயன்படுத்தி கொள்ளுமாறு பேரியக்கத்தின் சார்பில் கோரிக்கைகள்  வைக்கப்பட்டது*
இவண்.
*கோ.குமார்*
 மாவட்ட செய்தி தொடர்பாளர்
 *தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்* 
சென்னை மாவட்டம்.

நாமக்கல் மாவட்டத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் மாவட்ட பொதுக்குழுவில் Dr.அ.மாயவன் சிறப்புரையாற்றுகிறார்

மாண்புமிகு. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று சட்டப்பேரவைத் தலைவராக திரு.மு.அப்பாவு பதவி ஏற்றுக்கொண்டார். உடன் அவை முன்னவர்.திரு.துரைமுருகன் அவர்கள் மற்றும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்.திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்

Tuesday, 11 May 2021

அறநிலைத்துறை அமைச்சர் மாண்புமிகு.சேகர்பாபு வை- நம் பேரியியக்கத்தின் மாநிலத் தலைவர் திரு.சு.பக்தவச்சலம் உள்ளிட்ட சென்னை மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.


*தமிழ்நாடு உயர்நிலை* - *மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்* .
=================================
 *நிறுவனர் Dr.அ. மாயவன் Ex.MLC* 
=================================

 *நாள் :11.05.2021* 

 சென்னை பெருநகர மாநகராட்சி கல்வித்துறை சார்பில் இன்று (11-5-21) முதல் TCC பணிக்காக ஆசிரியர்களை அழைக்க இருப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் நம் இயக்கத்தின்  மாநில தலைவர் திரு.S.பக்தவச்சலம் தலைமையில் மாவட்ட தலைவர் திரு.கா.சாந்தகுமார் மாவட்ட செயலாளர் திரு.அ.சீனிவாசன்
 மற்றும் சென்னை மாவட்ட செய்தி தொடர்பாளர் 
திரு. கோ.குமார் மாவட்ட துணைத்தலைவர் திரு. மோகன், மாவட்ட இணைச்செயலாளர் திரு.கண்ணன் ஆகியோர் இன்று  காலை மணி 7.30க்கு சென்னை மாநகராட்சியில் நடைபெறும் கொரானா பணிகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள மாண்புமிகு அறநிலையத் துறை அமைச்சர் P.K.சேகர்பாபு அவர்களை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தோம். அமைச்சரிடம் நம் ஆசிரியர்கள் கடந்த ஆண்டு பணியின் போது  கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டதையும்,
தேர்தல் பணியின் போது கொரானாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததையும் அவரிடம் எடுத்து கூறினோம்.  
இவண்.
கோ.குமார்
 மாவட்ட செய்தி தொடர்பாளர்
 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சென்னை மாவட்டம்.

Tuesday, 4 May 2021

2017 ல் செவிலியர் பணி நிரந்தரம் செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் அ.மாயவன்.



_*29/11/17 அன்று செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ -ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் A. மாயவன் மற்றும் சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர் இன்று அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்*_