*தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிர கழகம்*
*நாமக்கல் மாவட்டம்*
*நன்றி அறிவிப்பு*
இன்று நடைபெற்ற கொரோனா பேரழிவிலிருந்து நம்மை காப்பதில் சித்தா, ஆயுர்வேதிக், ஹோமியோபதி மருத்துவத்தின் பங்களிப்பு என்ற கருத்தரங்கில் மூன்று துறையைச் சார்ந்த மருத்துவர்கள்
கலந்து கொண்டு மிகச் சிறப்பானதொரு கருத்துக்களை வழங்கினார்கள்.
கொரோனா நோயை ஆரம்ப நிலையிலேயே இந்த மூன்று மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த முடியும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்கள்.
இந்த கருத்தரங்கில் சுமார் 90க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
குறிப்பாக குடியாத்தம், வேலூர், கோவை பகுதிகளிலிருந்தும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது மாவட்ட ஆசிரியர் அலுவலர் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிக குறைவானது.
கொரோனா அரக்கனால் நாள்தோறும் உயிரிழப்புகள் நம் ஆசிரியர் சமுதாயத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்த நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் குறிப்பாக மூன்று துறைகளின் மருத்துவ பெருமக்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
க.செ. பாலகிருஷ்ணன்,
மாவட்ட தலைவர்
க. அருள்செல்வன்,
மாவட்ட செயலாளர்
பெ. குணசேகரன்,
மாவட்ட பொருளாளர்.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்.
நாமக்கல் மாவட்டம்.
No comments:
Post a Comment