கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Monday, 30 April 2018

மே...8 வேன் பிரசார அழைப்பு...மாநில துணை பொதுச்செயலர்

கோட்டை முற்றுகை க்கு மாநில துணை பொதுச்செயலாளர் செதுசெல்வம் அவர்கள்,மாவட்ட செயலாளர் நீ.இளங்கோ வேன் பிரசாரம் மூலம் சிவகங்கையில் அழைப்பு

புதுக்கோட்டை... விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்வோம்...TNHHSSGTA

புதுக்கோட்டை... விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்வோம்...TNHHSSGTA மாவட்ட தலைவர் செல்வேந்திரன் அவர்கள் மாணவர் நலன்கருதி முகாம் முன்பு பேனர் வைத்து அழைப்பு....

கோவை...பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிறைவு பாராட்டுவிழா

கோவை...பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிறைவு பாராட்டுவிழா மாவட்ட தலைவர் அருளானதம் தலைமையில் பட்டதாரி ஆசிரியர்களின் பாதுகாவலன் அ.மாயவன் அவர்களின் பொற்கரங்களால் உழைப்பாளர் தினத்தில் வழங்கப்படுகிறது.....

Saturday, 28 April 2018

மே 8,...முற்றுகை க்கு ஆசிரிய பெருமக்கள் அழைப்பு..அ.மாயவன்

*மே-8 ஜாக்டோ-ஜியோ கோட்டை முற்றுகைக்கான  பரப்புரையில் *பட்டதாரி* *ஆசிரியர்களின் பாதுகாவலன்*
*அ.மாயவன்* .அவர்கள் சென்னை விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு சென்ற போது ஒவ்வொரு ஆசிரிய,ஆசிரிய சகோதரிகள் சுற்றி சூழ்ந்து எங்களை கை விட்டுவிடாதீர்கள் அய்யா....உங்களால் மட்டுமே முடியும் என கூறியதோடு...சென்னை கோட்டை முற்றுகையில் குடும்பத்தோடு வருகின்றோம் அய்யா என்று உத்தரவாதம் கொடுத்தபோது.....

     தகவல் *திண்டுக்கல் மு.முருகேசன்* மாநில செய்தி தொடர்பாளர் TNHHSSGTA*

Thursday, 26 April 2018

மாநில தலைவர் சு.பக்தவச்சலம் அமெரிக்கா பயணம்

மாநில மாவட்ட பொறுப்பாளர்களுக்கு கனிவான வேண்டுகோள்
எனது குடும்ப வேலை நிமித்தமாக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளதால்
சங்கம்தொடர்பான பனிகள் மற்றும்உறுப்பினர்கள் பிரச்சனைகள் சார்ந்து
மற்ற நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்

இங்ஙணம் S பக்தவச்சலம்

இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார்...அ.மாயவன் நிறுவனத் தலைவர்

2009 பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான ஊதியமுரண்பாட்டை உடனடியாக நிறைவேற்ற ஆதரவு தெரிவித்தார்....தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் அ.மாயவன்

Tuesday, 24 April 2018

பட்டதாரி ஆசிரியர்களின் பாதுகாவலன் அ.மாயவன் அவர்களின் அறிக்கை.....

விடைத்தாள் திருத்த ஆசிரிய பெருமக்களுக்கு வேண்டுகோளை அ.மாயன் அவர்கள் அறிக்கையாக வெளியிட்டார்...மே 8 சென்னை முற்றுகையில் பங்கேற்க அழைப்பு  விடுத்துள்ளார்

Sunday, 22 April 2018

உபரி பணியிடத்தை ஆகஸ்டில் நடத்த .. கோவை மாவட்ட தலைவர் அருளாநந்தம் வலியுறுத்தல்

அன்பார்ந்த பட்டதாரிஆசிரியத்தோழர்களே இன்று நமது தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோவை மாவட்டம் சார்பில் மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

உபரிப்பணியிட ஆசிரியரின் பாதிப்பை அவர் உள்வாங்கிக்கொண்டார்.வரும் ஆகஸ்ட் மாதம் வரை உபரிப்பணியிட கலந்தாய்வை நிறுத்துமாறு கல்விச்செயலரின் தனி அதிகாரியிடம் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் சில கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக வலியுறுத்தியுள்ளோம்.அவற்றை சிலமணித்துளிகளில் பதிவிடுகிறோம்.
நன்றி.

என்றும் பட்டதாரி ஆசிரியர் நலனில்...
TNHHSSGTA
கோவை.
த.அருளானந்தம்
மாவட்டத்தலைவர்
R.சண்முகசுந்தரம்
மாவட்டச்செயலர்
த.சரவணக்குமார்
மாவட்டப்பொருளாளர்
காஜா முகைதீன்
மாவட்ட செய்தித்தொடர்புச்செயலர்.

மே..8 கோட்டை முற்றுகை... அ.மாயவன் அழைக்கிறார்

Cps உட்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கோட்டை முற்றுகையில் கலந்துகொள்ளுமாறு அ.மாயவன் அழைப்பு விடுத்துள்ளார்

Friday, 20 April 2018

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாக ஆர்ப்பாட்டத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முருகனுக்கு பணிவழங்க கோரி ......

அருமை உடன்பிறப்புக்களே கடந்த 2017 செப்டம்பரில் நடைபெற்ற ஜாக்டோ- ஜியோ  போராட்டத்தில் நம்மோடு கலந்து கொண்டு  பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் மோட்டார் வாகன பராமரிப்பு துறையைச்சார்ந்த  முருகன் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இன்று வரை (8மாதங்கள்) பணியில் சேராமல் அவரும் அவரது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ஜாக்டோ- ஜியோவின் வீரம் செறிந்த போராட்டத்தால்தான் இன்று புதிய ஊதியத்தை பெறுகின்றோம்  என்பதையும் அறிவோம். ஆனால் நமது உடன்பிறப்பு முருகன் புதிய ஊதியம் பெறவுமில்லை. கடந்த 8 மாதங்களாக ஊதியமும் பெறவில்லை. எனவே உடன்பிறப்புக்களே நமது உடன்பிறப்பு முருகனை மீண்டும் பணியமர்த்தக்கோரி இன்று (20.04.2018)வெள்ளிக்கிழமை  மாலை 5.30 மணி அளவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற்றது

இவண்

மு.முருகேசன்
ஒருங்கிணைப்பாளர் ஜாக்டோ-ஜியோ திண்டுக்கல்
மற்றும்
மாநில செய்தி தொடர்பாளர்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

Thursday, 19 April 2018

பத்தாம் வகுப்பு விடைதாள் திருத்தும் மையங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்.. மாநில பொதுச்செயலாளர் கோவிந்தன் அறிக்கை

பத்தாம் வகுப்பு விடைதாள் திருத்தும் மையங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என் பத்திரிக்கைக்கு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தன் அறிக்கை விடுத்துள்ளார்.....

உற்சாக வரவேற்ப்பு நிறுவனத் தலைவருக்கு.-கிருஷ்ணகிரி

ஜாக்டோ ஜியோ கூட்டத்துக்கு வந்த நம் பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர்.அ.மாயவன் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கிருஷ்ணகிரியில் அளிக்கப்பட்டது.....மாநில சட்டசெயலாளர் திரு நந்தகுமார் அவர்கள்,மாநில துணை தலைவர் தர்மன் அவர்கள்,மாவட்ட தலைவர் கணேசன் செயலாளர் பொருளாளர் மகளிர் அணி செயலாளர்,கழக உறுப்பினர்கள் அனைவரும் வந்து உற்சாக வரவேற்பை அளித்துள்ளார்கள்....

சென்னை முற்றுகை ....மே 8 வரலாறு பேசும்...

     -அ.மாயவன் ஒருக்கிணைப்பாளர்

ஜாக்டோ ஜியோ கிருஷ்ணகிரி-தர்மபுரி ஆயத்தக்கூட்டம் ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன் அவர்கள் தலைமையில் நடந்தது

ஜாக்டோ ஜியோ கிருஷ்ணகிரி-தர்மபுரி ஆயத்தக்கூட்டம் ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன் அவர்கள் தலைமையில் நடந்தது....

மே 8 கோட்டை முற்றுகையை வெற்றிபெற செய்ய ...வேன் பிரச்சாரம், ஆசிரியர் சந்திப்பு,அரசு ஊழியர்கள் சந்திப்பு பற்றியும், வெற்றி அடைய பல யுத்திகளை கையாளுவது சம்மந்தமாக தெளிவாக விவாதிக்கப்பட்டது...

YP651.புதுக்கோட்டை..கூட்டுறவு சங்கத்துக்கு ..மதுரை உயர்நீதி மன்றம் தடையானை...தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தொடர்ந்த வழக்கில்

*YP651* *ஜனநாயக சக்திகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றிதமிழ்நாடுஉயர்நிலைமேல்நிலைப்பள்ளிபட்டதாரிஆசிரியர்கழகதலைமையிலானபோராடும்ஜனநாயககூட்டணிசார்பில் மதுரைஉயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம்9/4/18அன்றுவிதித்துள்ள தடையாணையில் நமது வழக்கும் சேர்த்து தடையாணை அளித்து தீர்ப்பளித்துள்ளது மேலும்  முறைகேடாக இரவு 11மணிக்குதேர்வுசெய்யப்பட்டதாக ஒட்டப்பட்ட. 11பேரின் தேர்வு முறைகேடானது என மதுரைஉயர் நீதிமன்றம் தெளிவுறுத்தியுள்ளது தடையாணைவிதித்து தீர்ப்பளித்துள்ளது விபரம் வருமாறு. கூட்டுறவுத் தேர்தல்கடந்த ஏப்ரல் 9ந்தேதி கூட்டுறவு சங்கத்தில் நமது TNHHSSGTA சார்பில் மாவட்டத்தலைவர் அ.செல்வேந்திரன் மாவட்டச்செயலாளர் மா.குமரேசன் சட்டச்செயலாளர் ச.ரெங்கராஜு துனைத்தலைவர் பி.ஆறுமுகம் இணைச்செயலாளர் சு.வியாஸ் மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் S.R.சுரேஷ் மாவட்ட மகளீரணி செயலாளர் A.லதா குளத்தூர் வட்டமகளீரணிச் செயலாளர். ம.மீனாட்சி மாவட்டபொதுக்குழு உறுப்பினர் சு.மீனாட்சி கணிணி ஆசிரியர் சங்க மாவட்டத்தலைவர் S.R.கண்ணன் BRTE சங்கத்தின் மாவட்ட செயலாளர்  S.செந்தில்குமார் ஆகிய 11பேர் ஏப்ரல் மாதம் 9ந்தேதி வேட்புமணு தாக்கல் செய்ய கூட்டுறவு சங்க அலுவலகம் காலை 9.30 மணிக்கு  சென்றபோது தேர்தல்நடத்தும் அலுவலர் திருமதி.மேனகா 10.00மணிக்கு வாருங்கள் என்று தலைமறைவாகி போனையும் ஸ்விட்ச்ஆஃப் செய்துவிட்டார் அங்கு இருக்கவேண்டிய செயலாளர் திரு.மணிராஜ் அன்று முழுதும் ஆப்சென்ட்டாகி தலை மறைவாகிவிட்டார். தொடர்புடைய அலுவலர்களிடம் முறையிட்டபோது முறையான எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை . மாநிலதலைமைதேர்தல் ஆணையருக்கும் தொடர்புடைய அனைத்து முறையீட்டு அலுவலர்களுக்கும் சட்டப்படியான புகார்மனு அளிக்கப்பட்டு  தேர்தல் வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மாவட்டத்தலைவரும் வேட்பாளருமான. அ.செல்வேந்திரன் மற்றும் 10 வேட்பாளர்கள் Vs மாநில மாவட்ட தேர்தல் அலுவலர்கள். செயலாளர். தேர்தல்நடத்தும் அலுவரின் பேரில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று 18/4/18 விசாரணைக்கு வந்தது. நமது நியாயம் ஏற்க்கப்பட்டது. அனைத்து முறைகேடான தேர்தல் நடவடிக்கைகளுக்கும் *தடையாணை* *பிறப்பிக்கப்பட்டது *மேலும்9/4/18அன்றுபிறப்பித்ததடையாணைஇந்தவழக்கிற்கும்பொருந்தும்என்றும்தீர்ப்பளிக்கப்பட்டுவழக்கு23/4/18அன்றுஒத்திவைக்கப்பட்டது* நியாயமான நமது போராட்டம் வென்றது நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆதரவளித்த அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இவண் *போராடும்ஜனநாயககூட்டணி*

Wednesday, 18 April 2018

திருச்சியில் ஆர்பாட்டம்...காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க

திருச்சியில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆர்ப்பாட்டம் நடந்தது... TNHHSSGTA- மாநில துணை தலைவர் கோபிநாதன் அவர்கள் மாவட்ட தலைவர் செயலர் பொருளார் உட்பட நம் இயக்க பொறுப்பாளர்கள் கலந்து வாரியம் அமைக்க கோசம் எழுப்பினர்

கோவையில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க ....

கோவையில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆர்ப்பாட்டம் நடந்தது... TNHHSSGTA மாவட்ட செயலாளர் சரவணகுமார் ஆர்பாட்ட உரை நிகழ்த்தியபோது....

Monday, 16 April 2018

திருத்தனியில் ஆர்ப்பாட்டம்... மாநில துணைத் தலைவர் திருவள்ளூர் சாமி முன்னிலையில்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி திருத்தணியில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்... செல்வேந்திரன் தலைமையில்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நமது உரிமைக்குரலும் ஓங்கி ஒலிக்கட்டும்  16/4/18  இன்று திங்கள்கிழமை மாலை 5மணிக்கு புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா TNHHSSGTA. நமது தமிழ்நாடு உயர்நிலை -மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழகத்தின் சார்பில்  எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் அன்பிற்கினிய  ஆசிரிய தோழர்களே தோழியர்களே  நாம் உண்ணும் உணவு விவசாயிகளின் உழைப்பு விவசாயி சேற்றிலே கை நாமெல்லாம் சோற்றிலே கை தமிழ்மக்களின் உணர்வுகளில் ஒன்றிப்போம்  காவிரிநீர் நியாயமான சட்டப்படியான நமது தமிழக உரிமையை மீட்டெடுப்போம்  நாமும் அதில்  இணைவோம்  வாருங்கள் அனைவரும் நம் உணவு நம் விவசாயி நாம் காப்போம் உணர்வாய் சங்கமிப்போம் வாருங்கள்  தோழமையுடன் மாவட்டக்கழக தோழர்கள் *செல்வேந்திரன் குமரேசன் முத்துகருப்பன்* *ரெங்கராசு குரு.மாரிமுத்து பாலசுப்பிரமணியன்லதா* *சுபா*       *இன்பராஜ்* *ஆறுமுகம்* *ஜெயராம்*  *பாஸ்கரன்* *வியாஸ்* *திருமுருகன்*  *மணவாளன்* *சுரேஷ்*  *இளையராஜா* *சரவணன்* *சலீம்* *நாகப்பன்* *சசிக்குமார்*  *பாலச்சந்திரன்* *ஜெயக்குமார்* *ஆசாக்கனி*     *சிவானந்தம்*  *பொன்னுச்சாமி* *சீனுவாசநாராயணன்* *சந்திரசேகரன்*   *குமார்*  மற்றும்  மாவட்ட வட்டக்கழகம் புதுக்கோட்டை மாவட்டம்