Friday, 30 July 2021
Tuesday, 27 July 2021
தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு..
*தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு..*
*தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.*
*1. ரயில்வே ஐ.ஜி.,யாக இருந்த சுமித் சரன் ஊர்க்காவல் படை ஐ.ஜி.,யாக நியமனம்..*
*2. பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த தினகரன், சிலைகடத்தல் தடுப்பிரிவு ஐ.ஜி.,யாக நியமனம்..*
*3. திருச்சி ஆயுதப்படை டிஐஜியாக இருந்த கயல்விழி, சென்னை காவல்துறை பயிற்சி பிரிவு டிஐஜியாக நியமனம்..*
*4. திருவாரூர் எஸ்.பி.,யாக இருந்த சீனிவாசன் திண்டுக்கல் எஸ்.பியாக நியமனம்..*
*5. சென்னை குற்றப்பிரிவு சிஐடி சிறப்பு பிரிவு எஸ்.பி.,யாக இருந்த விஜயகுமார் திருவாரூர் எஸ்.பி.,யாக நியமனம்..*
*6. திண்டுக்கல் எஸ்.பி.,யாக இருந்த ரவளிபிரியா தஞ்சாவூர் எஸ்.பி.,யாக நியமனம்..*
*7. தஞ்சாவூர் எஸ்.பி.,யாக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் ராணிப்பேட்டை எஸ்.பி.,யாக நியமனம்..*
*8. ராணிப்பேட்டை எஸ்.பி.,யாக இருந்த ஓம் பிரகாஷ் மீனா சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி.,யாக நியமனம்..*
*9. சென்னை சிறப்பு சிஐடி குற்றப்பிரிவு ii எஸ்.பி.,யாக விக்ரமன் நியமனம்..*
*10. சென்னை சைபர் குற்றப்பிரிவு iii எஸ்.பி.,யாக தேவராணி நியமனம்..*
*11. சென்னை பெருநகர துணை ஆணையராக அருண் பாலகோபாலன் நியமனம்..*
*12. சென்னை, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு துணை ஆணையராக ஷியாமளா தேவி நியமனம்..*
Monday, 26 July 2021
ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயதை குறைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - Dr.அ.மாயவன்
ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயதை குறைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை எழுந்தள்ளது. தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் அ.மாயவன், மாநில நிர்வாகிகள் எஸ்.பக்தவச்சலம், எஸ்.சேது செல்வம், சி.ஜெயகுமார், ஆர்.கே.சாமி, முருகேசன் ஆகியோர் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது. முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் பணிமூப்பு அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் 45 வயதுக்கு மேல் பணியில் சேர்ந்தனர். இதனால் வறுமையில் இருந்த அவர்களது குடும்பம் தற்போது மீண்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 58 ஆக குறைக்க போவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஓய்வு பெறும் வயதை குறைப்பதை மறுபரிசீலனை செய்து இதற்கு பதிலாக காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வை உயர்த்தித் தர வேண்டும். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் ஓய்வு வயதை குறைக்கும் திட்டம் பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை
Friday, 16 July 2021
Subscribe to:
Posts (Atom)