Saturday, 31 March 2018
01.04.2018 ஈஸ்டர் தின வாழ்த்து செய்தி
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்: *அ.மாயவன் Ex.MLC* அவர்கள்)
ஆற்ற லதுவே படை
That is a 'host' that joins its ranks, and mightily withstands, Though death with sudden wrath should fall upon its bands. That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with fury.
STFI கூட்டம்..சென்னை TNPTF அலுவலகம்
STFI MEETING சென்னை ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது...நிறுவனத் தலைவர் அ.மாயவன் அவர்கள் உரையாற்றியபோது.....
ஜாக்டோ- ஜியோ உயர்மட்ட குழு கூட்ட முடிவுகள்
✍✍✍✍✍✍✍✍✍✍
திருவள்ளுருரில் நம் பேரியக்கத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா....
திருவள்ளூரில் நம் பேரியக்கத்தின் புதிய அலுவலக கட்டிடத்தை நிறுவனத் தலைவர் அ.மாயவன் அவர்களின் பொற்கரங்களால் திறந்து வைத்தார்...உடன் மாநில தலைவர் திரு.பக்தவத்சலம் அவர்கள் பொது செயலாளர் திரு.கோவிந்தன் அவர்கள் மாநில துணை தலைவர் சாமி அவர்கள் மாநில மகளிர் அணி தலைவி சுமதி அவர்கள் மற்றும் மாவட்ட வட்ட தலைவர்கள்.....
Friday, 30 March 2018
Thursday, 29 March 2018
DA....NEWS 6TH PAYCOMMISSION
D.A: 3 per cent increase in indirect employment to the Central Servant in the Sixth Pay Commission...
திருவள்ளுருரில் சங்க அலுவலகத்தை நிறுவனர்.அ.மாயவன் திறப்பு
*அன்பிற்கினிய பட்டதாரி ஆசிரியர் நண்பர்களே! வணங்கி மகிழ்கிறோம்*..... நமது சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா *31.3.18 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு* உங்களுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளுடன் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு மிக்க விழா தமிழகத்திலேயே நமது சங்கத்தின் முத்தாய்ப்பான *ஒரு மைல் கல்* என்பதை தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம். *புதிய அலுவலகத்தை சங்கம் பாராமல் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணற்ற சலுகைகளை, பணப் பலனை பெற்றுக் கொடுத்து வருபவரும், ஆசிரியர்களோடு ஒன்றாய் கலந்திருப்பவரும், எளிமையின் சிகரமானவரும், பாதுகாவலருமான நிறுவனர் திரு. அ. மாயவன் Ex.MLC அவர்கள் பொற்கரங்களால்* திறந்து வைத்து வாழ்த்தி பேசுகிறார். அவரது உடன்பிறவா சகோதரருமான *அமைதியின் ஆலமரம் நமது மாநில தலைவர் திரு.எஸ். பக்தவச்சலம்* அவர்கள் நமது சங்கக் கொடியை ஏற்றி வைக்கிறார். மாவட்ட தலைமை அலுவலகத்தின் பெயர்ப் பலகையை *ஆற்றல் மிக்க பொதுச் செயலாளர் திரு.கோவிந்தன்* அவர்கள் திறந்து வைக்கிறார். விழாவிற்கு அழகு, பெருமை சேர்க்கும் வகையில் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் *நல்ல உள்ளம் கொண்ட சிகப்பு மனிதர் திரு.ஆனந்தன்,* தலைமை நிலைய செயலாளர் செல்லமே செல்லம் *திரு.சாரதி,* மாநில மகளிரணி செயலாளர் *திருமதி.சுமதி, சென்னை மாவட்டத்தின் *ஹீரோ திரு.சாந்தகுமார்,* காஞ்சி மாவட்டத்தின் *இரும்பு, கரும்பு மனிதர் திரு.ஜெயமுருகன்* உள்ளிட்ட இரு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் வருகை புரிகின்றனர். இந்த அற்புதமான நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் நண்பர்கள், மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம். அனைவரையும் *நிறுவனர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்து தேனீர் விருந்து அளிக்கிறார்.* அனைவரையும் கைக்கூப்பி வரவேற்கும்..... *சி.முரளி* மாவட்டத் தலைவர், *துரை. பாண்டியன்* மாவட்ட செயலாளர், *ஜி.வி.கார்த்திகேயன்* மாவட்ட பொருளாளர், *என்.பிரேம்குமார்* மாவட்ட செய்தி தொடர்பாளர், *டி.தணிகாச்சலம்* மாவட்ட தலைமை நிலைய செயலாளர், *கே.ஜெயராமன்,* மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் *திருமதி.வேண்டாபாய், *திருமதி. உமாராணி,* உங்களில் ஒருவர் *சாமி.*
திருவள்ளூர் மாவட்ட அலுவலக கட்டிடம் திறப்பு.....
*தமிழ் நாடு உயர் நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்* திருவள்ளூர் மாவட்டம்
சங்கத்தின் தலைமை அலுவலகம் கட்டிடம் திறப்பு விழா
நாள்:31.03.18
கிழமை: சனிக்கிழமை
நேரம்:மாலை 3.00மணிக்கு மேல்
இடம்: அரசு பொது மருத்துவமனை எதிரில் திருவள்ளூர்
சிறப்பு விருந்தினர்:
*நிறுவனத் தலைவர்*
*திரு.மாயவன்* அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது.
அனைத்து மாநில, மாவட்ட, வட்டார. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
இவண்
மாவட்ட செய்தி தொடர்பாளர்
பிரேம்குமார்
மற்றும்
மாவட்ட செயலாளர்
துரைபாண்டியன்
ஜாக்டோ ஜியோ உயர்மட்ட கூட்டம்
*TNHHSSGTA JACTTO-GEO NEWS*
*A.மாயவன் ஒருங்கிணைப்பாளர்*
✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻
*31.3.18 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு ஜாக்டோ_ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் சென்னை அரசு ஊழியர் சங்கத்தில் நடைபெறும்.*
திண்டுக்கல் *மு.முருகேசன்* மாநில செய்தி தொடர்பு செயலாளர் -29.03.2018 வியாழக்கிழமை
திண்டுக்கல் *மு.முருகேசன்* மாநில செய்தி தொடர்பு செயலாளர் தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் (நிறுவனர்: *அ.மாயவன் Ex.MLC* அவர்கள்
வியாழக்கிழமை
==============
தீதின்றி வந்த பொருள்
திண்டுக்கல் *மு.முருகேசன்* மாநில செய்தி தொடர்பு செயலாளர்-28.03.2018 புதன்கிழமை
28.03.2018 புதன்கிழமை
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்: *அ.மாயவன் Ex.MLC* அவர்கள்)
தான்அறி குற்றப் படின்
Wednesday, 28 March 2018
நிர்வாகிகள் கூட்டத்தில்.....
தமிழ் நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் அ.மாயவன் Ex.M.L.C. அவர்களுடன் மாநில நிர்வாகிகள் எடுத்துக்கொண்ட செல்பி
Tuesday, 27 March 2018
புதிய கல்வி அலுவலர் பதவி ஏற்பு-காஞ்சிபுரம்
💐💐💐💐💐
TNHHSSGTA
வாழ்த்துச் செய்தி....
காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தின் புதிய மாவட்டக் கல்வி அலுவலராக இன்று பொறுப்பேற்றுள்ள திருமதி P மகேஸ்வரி அவர்களுக்கு நமது தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்....
இவண்
கே ஜி பாஸ்கரன்
மாநிலப் பொருளாளர்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பாராட்டு அழைப்பித்தல்
நமது கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய ஐயா அ.அகமது பாஷா அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா கிருஷ்ணகிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் 28.3.2018புதன் 4.00மணி அளவில் மிக சிறப்பாக நடை பெற இருப்பதால் அனைத்து ஆசிரியர் பெருமக்களும், முன்னால் மாணவர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சு.நந்தகுமார்
மாநில சட்ட செயலாளர்
(TNHHSSGTA) &மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம்
புதிய நிர்வாகிகள்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைபள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் புதிய நிர்வாகிகள் ஜனநாயக முறைப்படி திருச்சியில் நடந்த தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.நிர்வாகிகளுக்கு நிறுவனத் தலைவர் அ.மாயவன் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்
Monday, 26 March 2018
அ.மாயவன் Ex.MLC -வாழ்த்து மடல் 16.03.2018
வாழ்த்து மடல்
✍✍✍✍✍✍✍✍✍
நிறுவனத்தலைவர் மதிப்புமிகு : அ.மாயவன் Ex.MLC
✍✍✍✍✍✍ வாழ்த்து மடல்
16.03.2018 இன்று
அரசுப்பொதுத்தேர்வு
எழுதும் - 10ஆம் வகுப்பு
மாணவர்களே,
உங்களை - இரவு
பகல் - பாராமல்
தேர்வுக்கு - தயார் செய்த
பட்டதாரி ஆசிரிய
சொந்தங்களே - உங்களை
வணங்கி மகிழ்கிறேன்🙏
பத்து மாதங்கள் - தன்
குழந்தையை வயிற்றில்
சுமந்து - அதை
ஈன்றெடுக்கும் போது
சந்தோசப்படும் - தாய்
பத்து மாதங்கள் - தன்
மாணவர்களை
சனி, ஞாயிறு - மற்றும்
விடுமுறை தினங்கள்
என்று _பாராமல்
தேர்வுக்கு தயார் செய்து
அவர்கள் - தேர்வுக்கு
செல்லும் - போது
மிகச் சந்தோசப்படும்
பட்டதாரி ஆசான்களே
நீங்கள் - செய்த
செயலுக்கு -ஈடிணை
ஏதுமில்லை.
ஒரு வகுப்பு - பாடத்தை
படிப்பதில் - வேறுபாடு
24 மாதங்கள் படிக்கும்
மாணவர்கள் - மத்தியில்
10 மாதங்கள் - மட்டுமே
படிக்கும் - நம்
மாணவர்கள்
போட்டி போடும் - சூழல்
அப்படியிருந்தும்
மாநில அளவில்
மூன்று இடங்களை
பிடித்து _ நாங்கள்
யாருக்கும் - சலைத்தவர்கள்
அல்ல - என்று
நமக்கு பெருமை
சேர்த்திடும் - போது
நாம் அடையும்
சந்தோசத்திற்கு
அளவே இல்லை.
நமது மாணவ - கண்மணிகள்
16.3.2018 இன்று
அரசுப்பொதுத் தேர்வை
நோக்கி பயணிக்க
காத்திருக்க - அந்த
மாணவ செல்வங்கள்
சீரோடும்
சிறப்போடும்
தேர்வை - எதிர்க்கொண்டு
நல்லதொரு
வெற்றிவாகை - சூடிட
பட்டதாரி ஆசிரியர்களின்
பாதுகாவலர்
10 ஆம் வகுப்பு
மாணவர்களின்
சிரமத்தை குறைத்த
அதாவது
காலை 9.00 மணிக்கு
தொடங்கிய - தேர்வை
காலை 10.00 மணிக்கு
தொடங்குவதற்கு
காரணமாக இருந்த
மாணவர்களின் _ போராளி
மதிப்புமிகு
அ.மாயவன் Ex. MLC
அவர்களின்
வாழ்த்துக்களோடு
அவர் வழி நின்று
நானும் _ வாழ்த்துகிறேன்
மாணவ செல்வங்களே
வெற்றி வாகை
சூடிடுங்கள்
செல்க
வெல்க
வருக.
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
இவண்
வாழ்த்துக்களுடன் .......
திண்டுக்கல் முருகேசன்
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்:அ.மாயவன் அவர்கள்)
மாநில நிர்வாகிகள் கூட்டம்- சென்னை-- 17.03.2018
தீர்மானம்
தமிழ்நாடு உயர் நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் 17.03.2018 அன்று
✒மாநில தலைவர் பக்தவச்சலம் அவர்கள் தலைமையில் நடந்தது...
✒நிறுவனத்தலைவர் அ. மாயவன்அவர்கள் முன்னிலை வகித்தார்
✒எதிர்கால செயல் திட்ட அறிக்கையை பொதுச் செயலாளர் கோவிந்தன் அவர்கள் தாக்கல் செய்தார்...
✒வரவு செலவு அறிக்கையை பொருளாளர் பாஸ்கரன் அவர்கள் தாக்கல் செய்தார்
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
==================================
📌1. மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பு 24 ஆம் தேதி cps. திட்டம் ரத்து உட்பட நான்கு அம்ச கோரிக்கையை வழியுறுத்தி நடைபெறும் பேரணியில் பட்டதாரி ஆசிரியர்களை அதிகளவில் பங்குபெறச்செய்வது...
📌2. மே 8 ஆம் தேதி சென்னை கோட்டை முற்றுகையில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களையம் பங்குபெற செய்வது
📌3.ஒரிசாமாநிலம் பூரியில் மே 3,4,5 தேதிகளில் நடைபெறும் இந்தியபள்ளி ஆசிரிய கூட்டமைப்பு (STFI)மாநாட்டில் நம் இயக்கத்தின் சார்பாக 12 பேர் பங்குபெறுவது எனவும்....
📌4.STFI தமிழகத்தில் நடைபெறும் பெண்கள் மாநாட்டில் ஆயிரக்ககணக்கில் நம் பட்டதாரி பெண் ஆசிரியைகளை பங்குபெற செய்வது...
📌5..நம் பேரியக்கத்தின் மாநில மாநாட்டை ஆகஸ்டுக்குள் நடத்துவது என தீர்மானம் இயற்றப்பட்டது...
தீர்மானம் வெளியீடு....
திண்டுக்கல் முருகேசன்
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
பட்டதாரி ஆசிரியர்களின் காவலர் திரு.மாயவன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து- 07.03.2018
பட்டதாரி ஆசிரியர்களின் காவலர் திரு.மாயவன் அவர்களின் பிறந்தநாள்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் .





