*திருவள்ளூரில்*
*சாலையோரம் கிடக்கும்* *ஆதரவற்ற* *முதியோர்களுக்கு மதிய உணவு*
திருவள்ளூரில் சாலையோரம் கிடக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு நமது பேரியக்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.
கரோனா பொது முடக்கத்தின் காரணமாக திருவள்ளூரில் சாலையோரங்களிலும், கோவில்களின் அருகிலும் இருக்கும் ஆதரவற்ற முதியோர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.
இதுபற்றி அறிந்ததும் *தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் அ. மாயவன் எக்ஸ்எம்எல் சி அவர்கள் வழிகாட்டுதலின்படி* திருவள்ளூர் மாவட்ட தலைவர் கே. ஜெயராமன், மாவட்ட செயலாளர் ஈ.அருள் மாவட்ட பொருளாளர் டி. தணிகாச்சலம், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் டி. பாஸ்கர், மாவட்ட சட்ட செயலாளர் என். பிரேம்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன், மகளிர் அணி நிர்வாகிகள் தேன்மொழி சுமதி ,செல்வகுமாரி , பாரதி, சித்ரா, ஆயிஷாபேகம், செல்வி, சீலி ஆகியோர் சார்பில் மாநில சட்ட செயலாளர் ஆர்.கே.சாமி அவர்கள் மதிய உணவு வழங்க திட்டமிட்டிருந்தார்.
அதன்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் திருவள்ளூர் ஈஸ்வரன் திருக்கோயில், விநாயகர் கோயில், ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில், தேரடி, காக்களூர் ஏரிக்கரையில் உள்ள பாதாள விநாயகர் கோயில் அருகில் இருந்த 25 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
உணவு பெற்றுக் கொண்ட அனைவரும் ஆசிரியர் சமுதாயத்துக்கு கைகூப்பி நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
அர்ஜுனா ஓட்டல் எதிரே படுத்திருந்த இரண்டு மூதாட்டிகளுக்கு உணவு வழங்க சென்றபோது, அதில் ஒரு மூதாட்டி எனக்கு பசி எடுக்க வில்லை பிறகு வாங்கிக் கொள்கிறேன் என கூறியது மனதை நெகிழ வைத்தது. அந்த ஒரு ஜான் வயிறு பசிக்க வில்லை எனில் வேண்டாம் என்ற சொல்லும் மனசும் அந்த மூதாட்டியிடம் காணப்பட்டது.
அதேபோல் இன்னொரு மூதாட்டியை அம்மா ..அம்மா... அப்பா என்று அழைத்தும் அவர் எழுந்திருக்கவே இல்லை.
சாலையோரத்தில் இருப்பவர்களிடம் நெருங்கும் போதுதான் அவர்களுடைய நிலைமை என்ன என்று நமக்கு புரிகிறது.
அதேபோன்று ஒருசிலர் எங்களுக்கு சாப்பாடு, சாம்பார் ,காரக்குழம்பு, ரசம், மோர், பொரியல்,கூட்டு அப்பளம் ஆகியவற்றை ஒரு நாளைக்கு வாங்கி தருவீர்களா? சாப்பிட ஆசையாக இருக்கிறது என்று குழந்தைகள் போல கெஞ்சியது நமது மனதை உலுக்கியது.
இப்படி கேட்ட அவர்களுக்கு இன்னொரு நாள் அவர்கள் விரும்பிய சாப்பாட்டை கண்டிப்பாக வாங்கி தருகிறோம் என உறுதி அளித்து அந்த உணவை வாங்கி தர வேண்டும், அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஏக்கத்துடன் வீடு திரும்பினோம்.
No comments:
Post a Comment