கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Monday, 22 February 2021

திருவண்ணாமலைக்கு வருகை புரிந்த நமது சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு.எஸ்.பக்தவச்சலம் அவர்களை மாநிலத் துணைத்தலைவர் திரு. E. முருகன் அவர்கள் தலைமையில் சந்தித்து பேசினோம். உயர்நிலைபள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியருக்கே வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது. உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். PG பதவி உயர்வு வழங்கும்போது Same major / Cross major என்ற பழைய முறையே தொடர வேண்டும். ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். போராட்ட காலஊதியம்,DA, ஈட்டிய விடுப்பு ஒப்பளிப்பு, 21 மாத ஊதியநிலுவைத் தொகைகள் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் , செயலர் ஆகியோரை சந்தித்தித்து அழுத்தம் கொடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட பொருளாளர் திரு.R.சிவராஜ், மாவட்டச்செய்தி தொடர்பாளர் திரு.D.சிவக்குமார் மாவட்டத் துணைத்தலைவர் திரு.R. திருமலை,மாவட்ட இணைச்செயலாளர் திரு.S.தயாளன், திருவண்ணாமலை வட்டத் தலைவர் திரு.மோகன்ராஜ், கீழ்பென்னாத்தூர் வட்டத் தலைவர் திரு.சக்திவேல், கீழ்பென்னாத்தூர் வட்ட பொருளாளர் திரு.பாஸ்கரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.ஆர்.மண்ணு. மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரு.எம்.கணபதி ஆகியோர் கலந்துகொண்டு தக்க ஆலோசனைகளை வழங்கினர்.💐💐💐தோழமையுடன். M..ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், திருவண்ணாமலை மாவட்டம்.

No comments:

Post a Comment