கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Sunday, 25 April 2021

கொரோனா லாக்டவுனில் முதியவருக்கு உணவு பரிமாறிய காவல்துறை அதிகாரியை முகநூலில் பதிவிட்டதை அறிந்து-திண்டுக்கல் சரக DIG M.S.முத்துச்சாமி அவர்கள் தொலைபேசியில் என்னை அழைத்து பாராட்டினார்.



.நேற்று இரவு ஒரு முதியவருக்கு கொரோனா தொற்றையும் பொருட்படுத்தாமல் ஒரு காவல்துறை அதிகாரி அவரிடம் நெருக்கமாக அமர்ந்து உணவு பரிமாறிக்கொண்டிருந்ததை எனது முகநூலில் பதிவிட்டேன்.

எனது முகநூல் பதிவை பார்த்து இன்று அதிகாலை *திண்டுக்கல் சரக DIG மதிப்புமிகு.M.S.முத்துச்சாமி I.P.S.அவர்கள் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.* அவர் மகிழ்ச்சியில் பேசிய வார்த்தைகள்,

போலீஸ்காரங்க என்னதான் நாயா உழைச்சாலும் அவுங்களுக்கு பாராட்டு கிடைக்கிறது ரொம்ப அதிசயம் சார்..உங்களமாறி  பொதுமக்கள் பாராட்டும்பொழுது அவுங்க இன்னும் நல்லா வேலை செய்வாங்க சார். அவர் செய்த நற்செயல
உங்களுக்கு சொல்லனும்னு தோனுற அந்த குணத்தை பாராட்டுறேன் சார்.அவர் கொடுத்தாக் கூட பார்த்துட்டு அத பொதுமக்களுக்கு சொல்லனும்னு ஆசைப்படுறீங்களே அது எங்க ஒட்டுமொத்த காவலர் சமுதாயத்துக்கே சந்தோஷம் சார், தேங்க்யூ கார் தேங்க்யூ சார்னு 

என்னையும் என் பொன்னையும் பாராட்டி மகிழ்ந்தார். மனமகிச்சியாக இருக்கிறது.

நான் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரா ஒரு சில வரிகள் அய்யா M.S.முத்துச்சாமி அவர்களைப் பற்றி

2010 அன்று எங்கள் சாணார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டபோது பள்ளியில் அமைச்சர் தலைமையில் நடந்த விழாவில் அப்போதைய காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய திருமிகு.M.S.முத்துச்சாமி அவர்கள் விழாவில் கலந்துகொண்டு பேசியபோது

 *கர்மவீரர் காமராஜர் ஒருவர் இல்லை என்றால் நான் இந்த மேடையில் இன்று உங்கள் முன் நின்றிருக்கமாட்டேன் என்றார்.* அந்த கல்வியைக் கொடுத்தவர் அவர். கல்வி தான் ஒருவரை மேம்படுத்தும் என்றார் மாணவர்கள் மத்தியில்

ஆசிரியராக நான் கற்றுக்கொண்டது.

 அவர் கிராம்ப்புறங்களில
கல்வி நிலையங்களை உருவாக்காமல் விட்டிருந்தால் பட்டி தொட்டியிலிருந்து இன்று லட்சக்கணக்கான ஆசிரியர்-அரசூழியர்கள்  உருவாகியிருக்க முடியுமா. கல்வியால்தான் இன்று எனக்கும் ஆசிரியர் என்ற அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கல்வி மட்டுமே ஒருவரை மேம்படுத்தும்.

 *மதிப்புமிகு. திண்டுக்கல் சரக DIGI M.S.முத்துச்சாமி I.P.S. அவர்களின் சமூகப்பணி* மென்மேலும் சிறக்க நெஞ்சம் நிறைந்து வேண்டுகிறேன்.🙏🙏🙏

No comments:

Post a Comment