கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Thursday, 11 March 2021

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பயிற்சி வழங்கப்பட்டதை அறிந்து உடனடியாக ரத்து செய்யக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாநில செயலாளர் சாமி அவர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் முறையிட்டனர்.


*பட்டதாரி ஆசிரியர் நண்பர்களே வணக்கம்*

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் தேர்தல் பயிற்சி வகுப்புகளை ரத்து செய்து தருமாறு திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. முத்துசாமி அவர்களிடம் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் அ. மாயவன் அவர்கள் சார்பில் வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு மனு அளிக்கப்பட்டது.

 இதை பெற்றுக்கொண்ட அவர், வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் விடியோ வகுப்புகள் நடைபெறாது என்றும், விண்ணப்பம் 12 மட்டும் பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டு செல்லலாம் என்றார்.

 அடுத்த பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறாது என உறுதி அளித்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 இந்த சந்திப்பின்போது மாவட்ட தலைவர் கே. ஜெயராமன், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் த.பாஸ்கரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன்,  வட்ட நிர்வாகி உமா சங்கர் மற்றும் மாநில சட்ட செயலாளர் சாமி இருந்தனர்.

No comments:

Post a Comment