தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்
நிறுவனத் தலைவர் *அ.மாயவன் அவர்கள்* ,தலைவர் பக்தவச்சலம் அவர்கள் பொதுச்செயலாளர் கோவிந்தன் அவர்கள் பொருளாளர் பாஸ்கரன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாநில தகவல் தொடர்பு செயலாளர் முருகேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில்.....
📌 புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல்
📌 21மாத நிலுவை தொகை பெறுதல்
📌 ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைதல்
📌சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல் உட்பட 4 அம்ச கோரிகைகாக பல கட்ட போராட்டங்களை நடத்தினோம்....
👉 இறுதியில் மாணவர்களுக்கு இறுதி தேர்வு நெருங்கிய காரணத்தால் மாணவர் நலன் கருதியும் மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர் இனம் என்பதால் மார்ச் முதல் போராட்டங்களை நிறுத்தினோம்... விடுமுறை நாளான மார்ச் 22 ல் பேரணி நடத்தினோம்...எங்கள் கோரிக்கை நிறைவேறுவதற்காக மே 8ல் சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்....
இவ்வாறு மாணவர் நலனில் நாங்களும் நாம் சார்ந்த ஜாக்டோ ஜியோ அமைப்பும் அவர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாத வகையில் போராட்டங்க்ளை நடத்தி வருகின்றோம்....
👉இவ்வாறு இருக்கும் சூழலில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்பதாக சில அமைப்புகள் தெரிவித்துள்ளன....
📌ஆனால் நாங்கள் மாணவர் நலனிலும் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் பெற்றோர்கள் நலனிலும், பொதுமக்களின் நலனிலும் அக்கறை கொண்டு எந்த தீங்கும் எந்த ஒரு இடையூறும் நாம் சார்ந்த்திருக்கும் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் *விடைத்தாள் திருத்தும்* *பணியை ஒருபோதும் புறக்கணிக்காது* எனவும் அனைத்து ஆசிரியர்களையும் *விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள* எங்கள் அருமை ஆசிரிய பெருமக்களுக்கு அறிவுறுத்துவோம் என்பதை எங்கள் இயக்கத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கின்றோம்.....
No comments:
Post a Comment