கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Friday, 9 April 2021

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் கல்விசாரா அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கக்கோரி அரசு கூடுதல் தலைமைச்செயலர் திருமிகு.கிருஷ்ணன் IAS அவர்களை நம் பேரியியக்கம் சந்தித்து மனு அளித்தல்*


தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளிப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவர் *முனைவர் அ.மாயவன் அவர்களின்* வழிகாட்டுதலின் படி நமது பேரியியக்கத்தின் மாநிலத் தலைவர் *திரு.சு.பத்தவச்சலம் அவர்கள்*  தலைமையில் இன்று *கூடுதல் முதன்மைச் செயலர் (நிதித்துறை) திருமிகு.கிருஷ்ணன் IAS அவர்களை* சந்தித்து *அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் கல்வி சாரா  அலுவலர்களுக்கு* இந்த மாதம் ஊதியம் உடனடியாக வழங்கக்கோரி  நமது இயக்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது. அதனை ஏற்ற  நிதித்துறை செயலர் *நாளை அனைவருக்கும்* ஊதியம் கிடைக்கும் வண்ணம் *பட்ஜெட் ஆர்டர்* வழங்குவதாகவும் அதோடு அடுத்த வாரம் திங்கள் செவ்வாயில் ஊதியம் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவாதம் கொடுத்துள்ளார் என்பதை மாநிலக் கழகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.இந்த நிகழ்வில் மாநில தலைமை நிலையச் செயலர் *விஜயசாரதி அவர்கள்* சென்னை மாவட்டத் தலைவர் *திரு சாந்தகுமார்* அவர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment