கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Friday, 13 April 2018

கனிதபாடத்தில் 21 மதிப்பெண்கள் வழங்க....தேர்வுத்துறை இயக்குனரிடம் முறையீடு


பட்டதாரி ஆசிரியர் நண்பர்களுக்கு வணக்கம்...
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு கணிதம் பாடத் தேர்வில் வினாத்தாளில் இருந்த குளறுபடிகளை கண்டிப்பாக அனைவரும் கவனித்து இருப்பீர்கள் .
அது தொடர்பாக நேற்று அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அவர்களை சந்தித்து விரிவான ஓர் விளக்கக் கடிதம் நமது மாநிலக் கழகம் சார்பாக நிறுவனர் திரு அ மாயவன் Ex MLC மற்றும் தலைவர் திரு S பக்தவச்சலம் ஆகியோர் வழங்கினர்.
மாணவர்கள் நலன் கருதி கணிதப் பாட வினாத்தாளில் உள்ள குழப்பங்களின் காரணமாக அவர்களது தேர்ச்சி பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் தவறான வினாக்களுக்கு உரிய மதிப்பெண்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விவரம் பின்வருமாறு...
ஒரு மதிப்பெண் வினாக்கள் 5
இரண்டு மதிப்பெண் வினாக்கள் 3
ஐந்து மதிப்பெண் வினாக்கள் 2
ஆக மொத்தம் 21 மதிப்பெண்களுக்கு மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
நல்லதொரு அறிவிப்பு கிடைக்கும் என நம்புகிறோம்.
இவண்
கே ஜி பாஸ்கரன்
மாநிலப் பொருளாளர்

No comments:

Post a Comment