கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Thursday, 30 August 2018

முதல்வரை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட தலைவர் ஜெகதீஸ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் ஆசிரியர்களின் சம்பளத்தை தவறாக பேசிய மாண்புமிகு. முதல்வரின் பேச்சை கண்டித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் க.ஜெகதீஸ்குமார் தலைமை தாங்கினர்' நம் பேரியியக்கத்தின் சார்பில் நூற்றுக்கணக்கானோர் ஜாக் டோஜியோ அமைப்பில் பங்கேற்றனர்.

மு முருகேசன்
மாவட்ட ஒருங்கிணைப்பாளார்
ஜாக் டோ - ஜியோ
திண்டுக்கல் மாவட்டம்

Wednesday, 29 August 2018

TNHHSSGTA-29.08.2018 செய்தித் துணுக்குகள்

29.08.2018 செய்தித் துணுக்குகள்

💧TET தேர்வு எழுத BEd Computer Science பட்டதாரிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை- & CM Cell Reply

💧B.LIT.,B.Ed., ELIGIBLE FOR MIDDLE SCHOOL H.M COURT ORDER COPY  -11.07.2018

💧80 சதவீத வரி சம்பளத்துக்கு போகிறது*
வருடாவருடம் ஊதிய உயர்வு இனிமேல் இருக்காது..*
சம்பள கமிஷன் கலைப்பு? - மத்திய அரசு முடிவு

💧அரசு உதவி பெறும் பள்ளிகளில் -ஆங்கில வழிப்பாடப் பிரிவு துவங்க-தொடக்க கல்வி இயக்குநரின் நிபந்தனைகள் மற்றும் அனுமதி கோரும் படிவம்

💧தேசிய திறனாய்வு தேர்வு : ஆசிரியர்களுக்கு அறிவுரை*

💧ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியாளர்கள் சங்கமம் நடத்தும் கனவு ஆசிரியர்களும் கலாம் மாணவர்களும் நிகழ்ச்சி அழைப்பு!

💧இனி TN SCHOOL ATTENDANCE APP மூலம் வருகை பதிவு - தலைமை ஆசிரியர்கள் App Download செய்ய உத்தரவு - CEO செயல்முறைகள் (27.08.2018)*

💧TET தேர்வு எழுத BEd Computer Science பட்டதாரிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை- & CM Cell Reply

💧80 சதவீத வரி சம்பளத்துக்கு போகிறது வருடாவருடம் ஊதிய உயர்வு இனிமேல் இருக்காது.. சம்பள கமிஷன் கலைப்பு? மத்திய அரசு முடிவு

💧💧CTET தேர்வு டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும்: சிபிஎஸ்இ அறிவிப்பு*

💧80 சதவீத வரி சம்பளத்துக்கு போகிறது வருடாவருடம் ஊதிய உயர்வு இனிமேல் இருக்காது.. சம்பள கமிஷன் கலைப்பு??? மத்திய அரசு முடிவு*?

💧Government issues notification in UGC minimum standards of procedure for award of M.Phil & Ph.D Degree Regulations 2018.

💧அரசுத்துறைகளில் கறுப்பு ஆடுகள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி

💧மாவட்ட வாரியாக 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது

💧EMIS வலைதளத்தில் தற்போது மாணவர்களின் பெயர்களை தமிழில் டைப் செய்வதற்கு தேவையான Google chrome extension எவ்வாறு தரவிறக்கம் (Download) செய்து பயன்படுத்த வேண்டும் -வழிமுறைகள்

💧B.LIT.,B.Ed., ELIGIBLE FOR MIDDLE SCHOOL H.M COURT ORDER COPY  -11.07.2018

💧விடைத்தாள் திருத்துவதில் புதிய முறை: சில மணி நேரங்களில் வெளியான தேர்வு முடிவுகள்!*

💧அரசு உதவி பெறும் பள்ளிகளில் -ஆங்கில வழிப்பாடப் பிரிவு துவங்க-தொடக்க கல்வி இயக்குநரின் நிபந்தனைகள் மற்றும் அனுமதி கோரும் படிவம்

💧தேசிய திறனாய்வு தேர்வு : ஆசிரியர்களுக்கு அறிவுரை

💧10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள 890 பள்ளிகளை காப்பாற்ற ஆசிரியர்கள் தீவிர முயற்சி!*

💧💧பாஸ்போர்ட் மற்றும் அஞ்சல் அலுவலகத்துக்கு  களப்பயணம் சென்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

💧மாவட்ட வாரியாக 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது : ஆசிரியர் தினத்தில் வழங்கப்படும்*

💧அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை*

💧M.Ed படிப்பு - செப். 3 வரை அவகாசம் - தமிழ்நாடு கல்வியல் பல்கலைக்கழகம்

💧 தேசிய நல்லாசிரியர் விருது பெரும் கோவை ஆசிரியைக்கு கார் பரிசு - மாணவர்களின் பெற்றோர் அசத்தல்

💧Government issues notification in UGC minimum standards of procedure for award of M.Phil & Ph.D Degree Regulations 2018.*

💧ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியாளர்கள் சங்கமம் நடத்தும் கனவு ஆசிரியர்களும் கலாம் மாணவர்களும் நிகழ்ச்சி அழைப்பு!

💧இனி TN SCHOOL ATTENDANCE APP மூலம் வருகை பதிவு - தலைமை ஆசிரியர்கள் App Download செய்ய உத்தரவு - CEO செயல்முறைகள் (27.08.2018)


தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
*நிறுவனர் முனைவர்அ.மாயவன் அவர்கள்

Monday, 27 August 2018

ஆசிரியர் தினத்தன்று கரூரில் காத்திருப்பு போராட்டத்தை TNHHSSGTA அறிவித்தது

கரூர் மாவட்டத்தில் பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள் 60 பேருக்கு மார்ச் 2018 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்திய மதிப்பூதியம் இன்று வரை வழங்கப்படவில்லை ...... நமது போராளி சங்கமான TNHHSSGTA*இது தொடர்பாக *காத்திருப்பு போராட்டத்தை *செப்டம்பர்05ஆசிரியர் தினத்தில் அறிவித்து உள்ளது.* இது சார்ந்த போராட்ட அறிவிப்பை பள்ளிகல்வி துறை செயலாளர், பள்ளி கல்வி துறை இயக்குநர், அரசு தேர்வுகள் துறை இயக்குநர், இணை இயக்குநர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உட்பட உயர் அதிகாரிகளுக்கும், காவல் துறை மற்றும்  ஊடகத்துறைக்கும்  இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒன்றுபடுவோம் ....... போராடுவோம். ....... வெற்றி பெறுவோம்.......

Thursday, 23 August 2018

கலைஞருக்கு அஞ்சலி - மதுரை ஜாக்டோ - ஜியோ கூட்டத்தில்

இன்று ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்களுக்கு அஞ்சலியும் இரங்கலும் செலுத்தப்பட்டது.

அ.மாயவன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஜாக்டோ - ஜியோ

பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் அவர்கள் தொல்லியல் துறைக்கு மாற்றம்

: தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் உ.யர்கல்வித்துறை செயலர் சுனீல் பாலிவால், மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் உள்பட பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில்,சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் கடலூர் மாவட்டத்திற்கும், மதுரை மாவட்ட கலெக்டர் வீரராக ராவ், ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், ராமநாதபுரம் கலெக்டராக இருந்த நடராஜன் மதுரைக்கும், சிவகங்கை மாவட்ட கலெக்டராக ஜெயகாந்தன், பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் தொல்லியல் துறைக்கும், திருவள்ளூர் கலெக்டராக இருந்த சுந்தரவல்லி, வணிகவரித்துறை இணை கமிஷனராகவும், கடலுார் கலெக்டராக இருந்த தண்டபாணி, எழுதுபொருட்கள் மற்றும் அச்சுதுறை இயக்குநராகவும்,உயர்கல்வித்துறை செயலராக மங்கத்ராம் ஷர்மா உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் பிறப்பித்துள்ளார்.

Wednesday, 22 August 2018

மதுரையில் இன்று நடந்த ஜாக்டோ-ஜியோ முடிவுகள்


         1.மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்,  முன்னாள். மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் மறைவுக்கும்,கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியான மக்களுக்கும் ஜாக்டோ-ஜியோ சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.            

2. கேரளா வெள்ளநிவாரண நிதியாக  அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியத்தை அரசு பிடித்தம் செய்து வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.

3.  தமிழக முதல்வர் பேச்சினைக்கண்டித்து 30.8.18 அன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. 

4.பல்வேறு சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு 4.9.18 ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் 4.10.18 அன்று நடத்துவது.  அதற்கு முன்பாக 24.9.18 முதல் 29.9.18 முடிய பிரச்சாரம் செய்வது.                            

5.  13.10.18 சேலம் வேலை நிறுத்த ஆயத்தமாநாடு திட்டமிட 15.9.18 அன்று ் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமும் 16.9.18 அன்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட விரிவடைந்த உயர்மட்டக்குழு கூட்டமும் சேலத்தில் நடத்துவது.

அ.மாயவன் ஒருங்கிணைப்பாளர்
ஜாக் டோ- ஜியோ
          மற்றும்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடக்குமா - TNHHSSGTA கோர்க்கை

பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடக்குமா - TNHHSSGTA கோரிக்கை நாளிதழின் மூலம் வைத்துள்ளது

ST FI -நாகர்கோயிலில் மகளிர் வரவேற்பு மாநாடு - மாநிலத் தலைவர் பக்தவச்சலம் உரையாற்றிய போது


அகில இந்தியப் பெண் ஆசிரியர்கள் மாநாடு கன்னியாகுமரியில் செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெறுகிறது.

அதற்கான வரவேற்புக் கூட்ட அழைப்பிதழ் மாநாடு நாகர்கோயிலில்  (புதன்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் *மாநிலத் தலைவர்* *திரு.சு.பக்தவச்சலம் அவர்கள், மாநிலப் பொருளாளர் திரு. கே.ஜி.பாஸ்கரன் அவர்கள், மாநில தலைமை நிலையச் செயலர் திரு.விஜயசாரதி அவர்கள் ,மாநில துணைப் பொதுச்செயலாளர் திரு.சேது செல்வம் அவர்கள், மாநில செயலாளர் திரு.O.செல்வம் அவர்கள், திரு. நீலகண்ட பூபதி அவர்கள், திரு. பிச்சைக் கனி அவர்கள், மாநில மகளிர் அணிச் செயலாளர்கள் திருமதி. லதா அவர்கள் திருமதி வாசுகி அவர்களும் கலந்து கொண்டனர்

Monday, 20 August 2018

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த TNHHSSGTA கோரிக்கை

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த தமிழ் நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது

Thursday, 16 August 2018

அரசாணை - தமிழக அரசு பொது விடுமுறை அறிவிப்பு(பாரத ரத்னா வாஜ்பாய் அவர்களின் மறைவுக்கு)

அரசாணை - தமிழக அரசு பொது விடுமுறை அறிவிப்பு(பாரத ரத்னா வாஜ்பாய் அவர்களின் மறைவுக்கு) 17.08.2018 வெள்ளிக்கிழமை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

அவருக்கு வயது 94.

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 40 நாட்களுக்கு மேலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதென எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் வாஜ்பாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நேற்றைய தினம் வெளியான அறிக்கையில், வாஜ்பாயின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து இன்று காலையும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதிலும் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியை சேர்ந்த பலரும் வாஜ்பாய் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் வாஜ்பாய் உயிர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று, இந்திய நேரப்படி மாலை 5.05க்கு பிரிந்தது. இதனையொட்டி பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

அவருக்கு வயது 94.

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 40 நாட்களுக்கு மேலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதென எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் வாஜ்பாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நேற்றைய தினம் வெளியான அறிக்கையில், வாஜ்பாயின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து இன்று காலையும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதிலும் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியை சேர்ந்த பலரும் வாஜ்பாய் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் வாஜ்பாய் உயிர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று, இந்திய நேரப்படி மாலை 5.05க்கு பிரிந்தது. இதனையொட்டி பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

Wednesday, 15 August 2018

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு அ.மாயவன் அஞ்சலி செலுத்தினார்


முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு தமிழ்நாடு உயர் நிலை - மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர் Dr. அ.மாயவன் அவர்கள் சென்னை மாவட்டப் பொருப்பாளர்கள் திரு.சாந்தகுமார், திரு.ஸ்ரீனி வாசன் திரு தமிழ்வாணன், மாநில தலைமை நிலையச்செயலாளர் திரு.விஜய சாரதி மாநில மகளிர் அணிச் செயலாளர் திரு தி.சுமதி அவர்கள் உட்பட சென்று அஞ்சலி செலுத்தினார்.

      பின்பு அ.மாயவன் அவர்கள் மெரினாவில் கலைஞர் தொலைக்காட்சி உட்பட அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் பேட்டியளித்தார்

சங்க அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் முனைவர்.அ.மாயவன்

72வது சுதந்திர தின விழா சென்னை சங்க தலைமை அலுவலகத்தில் நடந்தது.விழாவிற்கு மாநிலத் தலைவர் திரு' சு.பக்தவச்சலம் அவர்கள் தலைமை தாங்கினார். மூவர்ண தேசியக் கொடியை நிறுவனத் தலைவர் Drஅ.மாயவன் அவர்கள் ஏற்றினார்.சென்னை மாவட்டத் தலைவர் திரு.சாந்தகுமார் அவர்கள், செயலர் திரு.ஸ்ரீனிவாசன் அவர்கள், திரு.பொருளாளர் திரு.தமிழ்வாணன் அவர்கள் உட்பட சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆசிரிய பெருமக்கள் கலந்து விழாவை சிறப்பித்தனர்.விழா ஏற்பாடுகளை மாநில தலைமை நிலையச் செயலர் திரு. விஜய சாரதி அவர்கள் கவனித்தார்

Monday, 13 August 2018

கனடாவிலிருந்து தாயகம் திரும்புகிறார் முனைவர் அ.மாயவன்

கனடா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் முனைவர்.அ.மாயவன் அவர்கள் இன்று இரவு தாயகம் திரும்புகிறார் என்பதை மாநிலக் கழகம் தெரிவித்துக் கொள்கிறது.

Friday, 10 August 2018

டாக்டர் கலைஞர் அவர்களுக்கு-இரங்கல் செய்தி - Dr.அ.மாயவன்

நாள் : 08.08.2018

*டாக்டர் கலைஞர்*   *அவர்களுக்கு*

          *இரங்கல் செய்தி*

ஏழைகளின் சிரிப்பிலே இறைவனைக் கண்ட ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

தமிழக மக்களின் உந்து சக்தியாகவும், தமிழ் அன்னையின் தவப்புதழ்வராகவும், ஏழை மக்களின் கண்னீரைத் துடைத்தெரிய தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட .அரும்பெரும் தலைவராகவும், ஏழை மக்களின் சிரிப்பில் தான் இறைவன் வாழ்கிறான் என்று உணர்த்திய உன்னத தலைவராகவும், மக்களின் மனதில் நிறைந்திருக்கும் தமிழகத்தின் முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சிரம் தாழ்த்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறது

நெஞ்சைப் பிளக்கும் இந்த செய்தியை தாங்கிக் கொள்ளும் வலிமை இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கின்றோம் என்பதை மீண்டும் கண்ணீர் மல்க தெரிவித்துக் கொள்கின்றோம்.

*Dr.  அ.மாயவன்* *Ex.MLC* *
*நிறுவனத் தலைவர்*

*சு.பக்தவச்சலம்*  
    மாநிலத் தலைவர்

*தி.கோவிந்தன்*            மா.பொ.செயலாளர்

*கே.ஜி.பாஸ்கரன்*
மாநிலப் பொருளாளர்

*எஸ்.சேது செல்வம்*
மா.து .பொ.செயலாளர்

வெளியீடு

*திண்டுக்கல் மு .முருகேசன்*
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
*TNHHSSGTA - STATE BODY*
               _9003438973_

Thursday, 9 August 2018

டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு இரங்கல் - அ மாயவன் நிறுவனர் TNHHSSGTA

முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதார் ஆசிரியர் கழக நிறுவனர் Dr.அ.மாயவன் அவர்கள், தலைவர் திரு.சு.பக்தவச்சலம் அவர்கள் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளனர்

உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு

நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தமிழக அரசு தரம் உயர்த்தி இன்று அரசாணை பிறப்பித்துள்ளது