கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Wednesday, 22 August 2018

மதுரையில் இன்று நடந்த ஜாக்டோ-ஜியோ முடிவுகள்


         1.மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்,  முன்னாள். மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் மறைவுக்கும்,கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியான மக்களுக்கும் ஜாக்டோ-ஜியோ சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.            

2. கேரளா வெள்ளநிவாரண நிதியாக  அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியத்தை அரசு பிடித்தம் செய்து வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.

3.  தமிழக முதல்வர் பேச்சினைக்கண்டித்து 30.8.18 அன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. 

4.பல்வேறு சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு 4.9.18 ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் 4.10.18 அன்று நடத்துவது.  அதற்கு முன்பாக 24.9.18 முதல் 29.9.18 முடிய பிரச்சாரம் செய்வது.                            

5.  13.10.18 சேலம் வேலை நிறுத்த ஆயத்தமாநாடு திட்டமிட 15.9.18 அன்று ் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமும் 16.9.18 அன்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட விரிவடைந்த உயர்மட்டக்குழு கூட்டமும் சேலத்தில் நடத்துவது.

அ.மாயவன் ஒருங்கிணைப்பாளர்
ஜாக் டோ- ஜியோ
          மற்றும்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்

No comments:

Post a Comment