ஜாக்டோ ஜியோ காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் ஜூன் 10 முதல் மாநில தலைநகரில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள்கள் மற்றும் உயர்மட்ட குழு தலைவர்கள் உண்ணாவிரதம் இருக்க இருக்குறார்கள்
Wednesday, 30 May 2018
Tuesday, 29 May 2018
அ.மாயவன் அவர்கள் டாக்டர் பட்டம் பெற்றார்
பாண்டிச்சேரி லீ ராயல் பார்க் 5 நட்சத்திர ஹோட்டலில் சனிக்கிழமை நடைபெற்ற கோலாகல விழாவில் *ஆசிரியர் பணி* மற்றும் *சமுதாய சேவையில்* சிறப்பாக பணியாற்றியதற்காக அமெரிக்க பல்கலைக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் திரு. அ.மாயவன் Ex. M L C அவர்களுக்கு "டாக்டர் பட்டம்" வழங்கப்பட்டது.
இவண்
மு.முருகேசன்
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
TNHHSSGTA-STATE BODY
CEO,DEO,BEO நடவடிக்கைகள் குறித்து பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
CEO,DEO,BEO நடவடிக்கைகள் குறித்து பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள்- பள்ளிக் கல்வி நிர்வாக சீரமைப்பு புதிய கல்வி அலுவலகங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து வெளியிடப்பட்டுள்ளன
Monday, 28 May 2018
Dr.மாயவன் அவர்கள் ராஜபாளையத்தில்
நம் பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் *டாக்டர் அ.மாயவன்*Ex.MLC* அவர்கள் பாண்டிச்சேரியில் டாக்டர் பட்டம் பெற்று அதிகாலை 4 மணி அளவில் விழுப்புரம் வந்து இறங்கினார்...அப்பொழுதே நேற்று மாநில துணை பொதுச்செயலாளர் அண்ணன் சேதுசெல்வம் அவர்களுடன் கிளம்பி ராஜபாளையம் சென்று நம் இயக்கத்தின் உறுப்பினர் இன்னாசி ராஜ் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார்.மாநில செயலாளர் ஓ.செல்வம் அவர்களும் கலந்து கொண்டார்.ஓய்வறியா தங்கம் இன்று தர்மபுரி மாவட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக பாப்பிரெட்டிப்பட்டி சென்றுள்ளார்.அவருடைய இயக்க பயணம் சிறக்க வாழ்த்துக்களை மாநில கழகம் தெரிவித்துகொள்கிறது
இவண்
மு.முருகேசன்
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணை வெளியீடு
பத்தாம் வகுப்பில் தவறிய மாணவச்செல்வங்களுக்கு உடனடி தேர்வை எழுதி மேல்நிலை வகுப்பில் சேரும் வண்ணம் தேர்வுத்துறை இயக்குநகரம் அட்டவணையை வெளியிட்டுள்ளது
உடனடி தேர்வு-12 ஆம் வகுப்பு அரசாணை வெளியீடு
பன்னிரண்டாம் வகுப்பில் தவறிய மாணவர்களுக்கு உடனடி தேர்வை எழுதி கல்லூரிகளில் சேர பள்ளிகல்வியில் தேர்வு துறை இயக்குனரகம் வெளியிட்டது
Sunday, 27 May 2018
அ.மாயவன் அவர்களுக்கு வேலூர் ஜெயக்குமார் அவர்கள் வாழ்த்து மடல்
*தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் .*
✍✍✍✍✍✍✍✍✍
*நிறுவனத்தலைவர் மதிப்புமிகு முனைவர்.அ.மாயவன் Ex.MLC*
💐💐💐💐💐💐💐💐💐
*பாராட்டு மடல்*
✍✍✍✍✍✍✍✍✍
*முனைவர் பட்டம்*- ஆம்
என் தலைவனுக்கு
முனைவர் பட்டம்
அவரின் உழைப்புக்கு
கிடைத்த - அங்கீகாரம்
அவருக்கு -மேலும்
ஒரு மணிமகுடம்!.
எங்களின் மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை
உங்களுக்கு கிடைத்த
இந்த
*முனைவர் பட்டத்தை*
பார்த்து - எங்களை விட
மகிழ்ச்சி வெள்ளத்தில்
நீந்துவது
வேறுயாராக
இருக்க முடியும்
என் தலைவா!.
45 ஆண்டுகளுக்கும்
மேலான இயக்க பணி
ஆசிரியர் பணியிலிருந்து
ஓய்வு பெற்றாலும்
எங்களுக்காக - இன்றும்
குடும்பத்தை மறந்து
ஒடோடி உழைக்கிறாயே
அந்த உழைப்புக்கு
கிடைத்த அங்கீகாரம்
இந்த
*முனைவர் பட்டம்*
என் தலைவா!.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு
மட்டுமல்லாமல்
தமிழகத்தில் உள்ள
ஒட்டுமொத்த
ஆசிரியர்கள் -மற்றும்
அரசு ஊழியர்கள்
அனைவருக்கும்
7-வது ஊதியக்குழு
ஊதியத்தை போராடி
பெற்றுத்தந்தாயே - அதற்கு
கிடைத்த அங்கீகாரம்
இந்த
*முனைவர் பட்டம்*
என் தலைவா!.
ஒரு மாபெரும்
மிகச்சிறந்த
தலைமையின் கீழ்
நாங்கள்
இருக்கிறோம் - என்று
நினைக்கும் போது
சற்று - கர்வம்
அதிகமாகவே
எங்களுக்கு - உள்ளது
என் தலைவா!.
எங்கள் வாழ்நாளில்
26.05. 2018 என்ற
நாளை
மறக்க முடியாத
நாள் - ஆம்
புதுச்சேரி மாநிலத்தில்
உள்ள
அமெரிக்க பல்கலைக்கழகம்
லீ ராயல் பார்க்
என்ற
5 நட்சத்திர ஹோட்டலில்
புதுச்சேரி அரசின்
சபாநாயகர் மற்றும்
அமைச்சர்கள்
கலந்து கொண்ட
விழாவில்
அவர்கள் வழங்க
தாங்கள் பெற்ற
இந்த
*முனைவர் பட்டம்*
அந்த கண்கொள்ளா
காட்சியை
நேரில் - பார்க்க
முடியாவிட்டாலும்
அந்த நாளை
எங்களால்
மறக்க முடியுமோ
என் தலைவா!.
*தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரிர்கழகத்தின்*
நிறுவனத்தலைவர்
மதிப்புமிகு
அ.மாயவன் Ex. MLC
அல்ல - இனி
நீங்கள்
மதிப்புமிகு
*முனைவர் : அ.மாயவன் Ex.MLC*
என்று அழைக்கப்படும் போது
எங்களின் கண்களில்
ஆனந்த கண்ணீர்
பெருக்கெடுத்து ஓடுகிறது
என் தலைவா!.
இந்த மகிழ்வான
வேலையில்
CPS - யை ஒழித்து
GPF-யையும்
2004 முதல் 2006 வரை
தொகுப்பூதியத்தில்
நியமிக்கப்பட்ட
ஆசிரியர்களுக்கு
பணியில் சேர்ந்த
நாள் முதல்
காலமுறை ஊதியத்தையும்
பெற்று தந்திட
வேண்டும் என்ற
அன்பு வேண்டுகோளையும்
விடுத்து
தங்களுக்கு கிடைத்தை
இந்த
*முனைவர் பட்டத்தை*
பாராட்டி
வாழ்த்தி
வணங்கி
வரவேற்க்கிறோம்
என் தலைவா!.
💐💐💐💐💐💐💐💐💐
வாழ்த்துக்களுடன்........
*சி.ஜெயக்குமார்*,
மாநிலச்செயலாளர்,
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்.
முன்னால் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் அவர்களின் இல்ல திருமண விழாவில் மாயவன் அவர்கள் பங்கேற்ப்பு
நமது பேரியக்கம் தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக முன்னால் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழா தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் நாளை 28.5.2018 திங்கள் அன்று நடைபெற உள்ளது. இவ்விழாவில் நமது நிறுவனர் திரு: மாயவன் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.
மாயவன் அவர்களுக்கு டாக்டர் பட்டம்....அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கியது
பாண்டிச்சேரி லீ ராயல் பார்க் 5 நட்சத்திர ஹோட்டலில் சனிக்கிழமை நடைபெற்ற கோலாகல விழாவில் *ஆசிரியர் பணி* மற்றும் *சமுதாய சேவையில்* சிறப்பாக பணியாற்றியதற்காக அமெரிக்க பல்கலைக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் திரு. *அ.* *மாயவன் Ex. M L C* அவர்களுக்கு *"டாக்டர் பட்டம்"* வழங்கப்பட்டது.
இவண்
மு.முருகேசன்
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
TNHHSSGTA-STATE BODY
Saturday, 26 May 2018
புதுசேரி மாநிலத்தில் மாயவன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் திரு அ. மாயவன் EX,MLC அவர்களின் ஆசிரிய சமுகத்திற்கான அற்பணிப்பு பணியை பாராட்டி இன்று பாண்டிச்சேரியில் அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் முன்னிலையில் முனைவர் பட்டம் வழங்கிய புதுச்சேரி மண்ணிற்கு நன்றிகள். இவண் க.பிச்சைக்கனி மாநிலச் செயலாளர் TNHHSSGTA
Thursday, 24 May 2018
துப்பாக்கி சூட்டை கண்டித்து மாயவன் ஆர்ப்பாட்டம்
ஜாக்ட்டோ ஜியோ சார்பாக அப்பாவி 12 பேரின் துப்பாக்கி சூட்டை கண்டித்து ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன் ஆர்பாட்டம் செய்தார்...உடனடியாக அரசு பாதிக்கப்பட்ட 12 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்றார்
Wednesday, 23 May 2018
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு...நாளை ஜாக்டோ ஜியோ கண்டன ஆர்பாட்டம்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழககத்தின் நிறுவனத் தலைவரும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருமான *அ.மாயவன் Ex.MLC* அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் *தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் பிரட்சனைகாக அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு** நடத்தியதை கண்டித்து நாளை ஜாக்டோ-ஜியோ சார்பில்-மாவட்ட தலைநகரில் மாலை 5 மணி அளவில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டதில் நமது *இயக்க உறுப்பினர்களும் ஆசிரியபெருமக்களும்* கலந்துகொண்டு நமது எதிர்ப்பினை அரசுக்கு தெரிவிக்குமாறு இயக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்
தகவல்
*மு.முருகேசன்*
*மாநில செய்தி தொடர்பு* *செயலாளர்*
TNHHSSGTA-STATE BODY
Tuesday, 22 May 2018
ஸ்டெர்லைட்-கண்டன அறிக்கை
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர் *அ.மாயவன் Ex.MLC* விடுத்துள்ள
*கண்டன அறிக்கை* யில்
தூத்துக்குடி யில் துப்பாக்கி சூடு நடத்தியதை வன்மையாக கண்டிக்குறோம். அவர்களை அழைத்துபேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்...
*ஸ்டெர்லைட்* என்பது மக்களை பாதிக்கக்கூடிய சித்தாந்து..மக்கள் வேணாம்மென்று நிராகரிக்கிறபோது மக்கள் நல அரசு செவிசாய்க்கவேண்டும்..அதைவிட்டு பலவந்தமாக திணிப்பதை கண்டிக்குறோம்.துப்பாக்கி சூடு நடத்தி ஆஃப்பாவி மக்கள் 11 பேரை கொன்றதை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது என்றார்.
மேலும்,அக்குடும்பங்களுக்கு நிதி உதவி எவ்வளவு கொடுத்தாலும் ஈடு செய்யமுடியாது இருப்பினும் அரசு நிதியுதவி வழங்குவதோடு அக்குடும்பத்தில் ஒருவருக்கு *அரசு வேலை* வழங்கவேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தமிழக அரசை கண்டனத்துடன் வற்புறுத்துகிறது என்றார்
இவண்
மு.முருகேசன்
*மாநில செய்தி தொடர்பு* *செயலாளர்*
மாநில கழகம்
யார் காரணம்???* *ஆட்சியாளர்களா?* *ஆசிரியர்களா?*
*யார் காரணம்???*
*ஆட்சியாளர்களா?*
*ஆசிரியர்களா?*
*கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர 1.32 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கோட்டூர்புரத்தில் பேட்டி அளித்தார்.*
*அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்*
*தனியார் பள்ளிகளில் 25%இடங்களை ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என அரசு உத்தரவு போட்டது.*
*இதன் காரணமாக 1,32,000 ஏழை மாணவர்கள் இலவசமாக தனியார் பள்ளியில் கல்வி பெறப்போகிறார்கள்...*
*இவ்வளவு மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியதன் மூலம் கஷ்டப்பட்டு படித்து டெட் தேர்ச்சி பெற்று பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு அரசு பட்டை நாமம் போட்டுள்ளது..*
*30மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் 4,400 ஆசிரியர் பணியிடங்கள் போட்டிருக்க வேண்டும்..*
*அனைத்தும் தனியார் மயமாக்கி விட்டு அப்புறம் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது வருத்தம் அளிக்கிறது.*
*கேரளாவில் தனியார் பள்ளிகள் அரசுடமையாக்கப்பட்டு வருகிறது, ஆனால் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டு தனியார் வசம் சென்றடைகிறது.*
********************
*பள்ளிகளை மூடினால் தனியார் பள்ளிகளுக்கு மகிழ்ச்சி. இதுதான் அரசின் போக்கு என்பது நியாயம் இல்லை.*
*பிள்ளைகள் இல்லாத பள்ளிகளை உயர் அதிகாரிகள் வரை தனி கவனம் செலுத்தி அந்த பள்ளிக்கு திறமையான ஆசிரியர்களை நியமித்து தனி சலுகைகள் கொடுத்து வாழ வைக்க தெரியாமல் மூட நினைப்பது நொண்டி குதிரைக்கு சறுக்கினது சாக்கு என்பதே பொருந்தும்.*
*பிள்ளைகள் இல்லாத பள்ளி உள்ள ஊர் மக்களை திரட்டி பள்ளிகளை செம்மைபடுத்த எந்த உயர் அதிகாரியாவது நினைத்ததுண்டா அதுபோல் கூட்டம் போட்டு மக்களுக்கு விழிப்புணர்வு தந்த்துண்டா. இல்லையே. ஆசிரியர்களை மட்டுமே குறை கூறுவார்கள்.*
*அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்தால் மகிழ்ச்சி என்று கூறும் மாண்புமிகு கல்வி அமைச்சர் ஏன் MLA கள் மற்றும் அமைச்சர்களின் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்தால் மகிழ்ச்சி என்று கூறவில்லை.*
Monday, 21 May 2018
800 அரசுப்பள்ளிகளை மூட முடிவு..!தமிழக அரசு முடிவு
*அரசுப்பள்ளிகளை மூட முடிவு..!*
*800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகவும், மூடப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கவும் பரிந்துரை செய்துள்ளது. மேலும், இதுகுறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளனர்
சி.இ. ஓ.கூட்டத்தில் .-கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
*பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசிய தாவது*
*கல்வியில் புரட்சி ஏற்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.*
*ஜூன் மாதத்தில் வழங்கப்படும் புத்தகத்தில், இதை உணரலாம். பாட புத்தக காகிதத்தின் தரம், 70 எம்.எம்., ஆக முன்பிருந்தது.*
*தற்போது, 80 எம்.எம்., அளவில், உறுதியாக தயாரிக்கப்பட்டுள்ளது, கறுப்பு, வெள்ளை நிறத்தை மாற்றி, பல வண்ணத்தில் உருவாக்கியுள்ளோம்.*
*ஒரு குழந்தை, பிளஸ் 2 முடிக்கும் வரை, கல்விக்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை என்ற நிலையை உருவாக்கி காட்டுவோம்.*
*அதை உருவாக்க, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில், பி.இ., முடித்து விட்டு, 1.60 லட்சம் பேர் வேலையின்றி உள்ளனர்.*
*பிளஸ் 2 முடித்தாலே, வேலை வாய்ப்பு உத்தரவாதம் அளிக்கும், 'ஸ்கில் டிரெயினிங்' பயிற்சி அளிக்கப்படும்.*
*தமிழகத்தில் பயிலும், 81 லட்சம் மாணவர்களுக்கு, தலா ஐந்து மரக்கன்று வழங்கப்படும். பராமரிக்கும் மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்கும் முறையை, அரசு பரிசீலித்து வருகிறது.*
*இத்திட்டத்தை அறிவித்தால், நாடே திரும்பி பார்க்கும். நடப்பாண்டில், அரசு பள்ளியில், ஒரு லட்சம் மாணவர்கள்கூடுதலாக சேர்வார்கள் என தெரிகிறது. இவ்வாறு அவர் பேசினார்*
Saturday, 19 May 2018
ஜாக்டோ ஜியோ தீர்மானம்...திருச்சி
*அ.மாயவன்*Ex.MLC*
மாநில ஒருங்கிணைப்பாளர்
*ஜாக்டோ ஜியோ*
📌சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் 11.6.18 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்
மாநில தலைநகரில் ஒருங்கிணைப்பாளர்கள்கள் மற்றும் உயர்மட்டகுழு உறுப்பினர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்.....
📌மாவட்ட தலலைநகரில் 11.06.2018 முதல் தினதோறும் மாலைநேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
*📌புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவும் ஜாக்டோ-ஜியோ கோரிக்கை விடுத்துள்ளது*
*📌ஜாக்டோ ஜியோ விலிருந்து பிரிந்து சென்ற சங்கங்களுக்கு அழைப்பு விடுக்க முடிவு*
📌ஊதிய முரண்பாடுகளை களைய கோரி ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்
*
📌 *நேற்று வெளியான அரசானை எண் 100,101 கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்***
தகவல்
மு.முருகேசன் மாநில செய்தி தொடர்பு செயலாளர்
*TNHHSSGTA-STATE BODY*