கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Monday, 21 May 2018

சி.இ. ஓ.கூட்டத்தில் .-கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

*பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசிய தாவது*

*கல்வியில் புரட்சி ஏற்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.*

*ஜூன் மாதத்தில் வழங்கப்படும் புத்தகத்தில், இதை உணரலாம். பாட புத்தக காகிதத்தின் தரம், 70 எம்.எம்., ஆக முன்பிருந்தது.*

*தற்போது, 80 எம்.எம்., அளவில், உறுதியாக தயாரிக்கப்பட்டுள்ளது, கறுப்பு, வெள்ளை நிறத்தை மாற்றி, பல வண்ணத்தில் உருவாக்கியுள்ளோம்.*

*ஒரு குழந்தை, பிளஸ் 2 முடிக்கும் வரை, கல்விக்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை என்ற நிலையை உருவாக்கி காட்டுவோம்.*

*அதை உருவாக்க, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில், பி.இ., முடித்து விட்டு, 1.60 லட்சம் பேர் வேலையின்றி உள்ளனர்.*

*பிளஸ் 2 முடித்தாலே, வேலை வாய்ப்பு உத்தரவாதம் அளிக்கும், 'ஸ்கில் டிரெயினிங்' பயிற்சி அளிக்கப்படும்.*

*தமிழகத்தில் பயிலும், 81 லட்சம் மாணவர்களுக்கு, தலா ஐந்து மரக்கன்று வழங்கப்படும். பராமரிக்கும் மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்கும் முறையை, அரசு பரிசீலித்து வருகிறது.*

*இத்திட்டத்தை அறிவித்தால், நாடே திரும்பி பார்க்கும். நடப்பாண்டில், அரசு பள்ளியில், ஒரு லட்சம் மாணவர்கள்கூடுதலாக சேர்வார்கள் என தெரிகிறது. இவ்வாறு அவர் பேசினார்*

No comments:

Post a Comment