திருவண்ணாமலை CEO வெ.ஜெயக்குமார் அவர்களை பணியிடை நீக்க செய்யக் கோரி நடந்த மாபெரும் உண்ணாவிரததத்தை முடித்து வைத்து நம் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக *மாநிலத் தலைவர் திரு.சு.பக்தவச்சலம் அவர்கள்* சிறப்புரை ஆற்றினார். இந்த உண்ணாவிரதத்தில் நம் மாநில தலைமை நிலையச் செயலாளர் *திரு.விஜய சாரதி அவர்கள்* மாநில கழகம் சார்பில் கலந்து கொண்டார். மாவட்ட நிர்வாகிகளும், நம் இயக்க ஆசிரியப் பெருமக்களும், அனைத்து சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Sunday, 29 July 2018
SCHOOL AS HOME..திரு .அனில் அவர்களின் படைப்பு https://youtu.be/7tjcGGLXCPA
திண்டுக்கல் மாவட்டம் , நத்தம் வட்டம் .. அரசு மேல்நிலைப் பள்ளி ,சமுத்திரா பட்டி பட்டதாரி ஆசிரியர் திரு .அனில் (9943811304) அவர்கள் மாணவர்களுக்கு சுற்றுச் சூழல் மீது ஆர்வத்தை அதிகரிக்க "பள்ளிக்கூடமே வீடாக " - SCHOOL AS HOME ... என்னும் தலைப்பில் குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளார் .அவரது முயற்சியைப் பாராட்டுகிறது - TNHHSSGTA ,மாவட்டக் கழகம் , திண்டுக்கல் ..
Friday, 27 July 2018
Thursday, 26 July 2018
DPI யில் உள்ளிருப்பு போராட்டம் - அ.மாயவன் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள்
பள்ளிக் கல்வி வளாகத்தில் பள்ளிக் கல்வி இயக்குநரை முற்றுக்கையிட்டு திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை பணியிடை நீக்கம் செய்யக் கோரி அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
அ.மாயவன் நிறுவனர்
சு.பக்தவச்சலம் தலைவர்
மண்டலம் வாரியாக இணை இயக்குநர்கள் நியமித்து ஆணை
மண்டலம் வாரியாக இணை இயக்குநர்கள் நியமித்து ஆணை பிறப்பிக்கப்பட்து. இதன்படி இனி ஒதுக்கப்பட்ட மாவட்டங்களை கண்காணிப்பார்கள்
Tuesday, 24 July 2018
கரூர் CEO அலுவலக முற்றுக்கை போராட்டம் - பத்திரிக்கை செய்திகள் - பத்திரிக்கையாளர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
கரூர் CEO அலுவலக முற்றுக்கை போராட்டம் - பத்திரிக்கை செய்திகள் - பத்திரிக்கையாளர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தமிழ் நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்து கொள்கின்றது
மணவாடி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரின் ஆசிரியர் விரோதப் போக்கை கண்டித்து*
*கரூர் மாவட்டம் மணவாடி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரின் ஆசிரியர் விரோதப் போக்கை கண்டித்து* கரூர் மாவட்ட *முதன்மைக் கல்வி* *அலுவலரை* முற்றுக் கையிட்டு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் திரு.மகேஷ் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்
ஆசிரியர்தேர்வுவாரியம் இனி ஆசிரியர்பணிக்கு போட்டித்தேர்வுகளை நடத்தும் Tet தேர்வெழுதியவர்கள் குறைந்தபட்சம் பாசாகியிருந்தாலே போதுமானதாகும் போட்டித்தேர்வே பிரதானமாகும்
ஆசிரியர்தேர்வுவாரியம் இனி ஆசிரியர்பணிக்கு போட்டித்தேர்வுகளை நடத்தும் TET தேர்வெழுதியவர்கள் குறைந்தபட்சம் பாசாகியிருந்தாலே போதுமானதாகும் போட்டித்தேர்வே பிரதானமாகும்
Monday, 23 July 2018
வெளிநாட்டில் கல்வி பயணம் மேற்கொள்ள சேலம் அரசுப் பள்ளி மாணவர் தேர்வு - அரசு செலவில்
அரசு சார்பில், வெளிநாட்டில் கல்வி பயணம் மேற்கொள்ள, பண்ணப்பட்டி அரசு பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம், பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,745 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளியில், அரசு சார்பில், வெளிநாட்டில் கல்வி பயணம் மேற்கொள்ள, ஒன்பதாம் வகுப்பு மாணவர் மேகநாதன். சேலம் கோட்டை அரசு மகளிர் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவி ராகவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்புலன்ஸ் வாகனத்துக்காக, தானியங்கி வேகத்தடை கட்டுப்பாட்டு கருவியை, மாணவர் மேகநாதன் கண்டுபிடித்துள்ளார். ஆம்புலன்ஸ் வேகமாக வரும் போது, வேகத்தடை, தானாக, சமமான சாலையாக மாறி விடும்.
பின், மீண்டும், வேகத்தடையாக மாறிவிடும்.போக்குவரத்து சிக்னலும், பச்சை விளக்குக்கு மாறி, மற்ற சிக்னல்கள் சிவப்பு விளக்குக்கு மாறிவிடும்.
மேலும், செல்லக்கூடிய மருத்துவமனைக்கு, முன்னதாகவே அலாரம் அடிக்கக்கூடிய வகையில் புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி உள்ளார்.
பண்ணப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன் கூறுகையில், ''பல்வேறு அறிவியல் கண் காட்சியில், மேகநாதன் வெற்றி பெற்றுஉள்ளார்.
சேலம் மாவட்டம், பெருமை கொள்ளும் வகையில், அவர் வெளிநாடு செல்ல தேர்வு பெற்றது, மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.மாணவர், எந்த நாட்டுக்கு அழைத்து செல்லப்படுகிறார் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
கரூர் மாவட்டம் *மணவாடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் ஆசிரியர் விரோதப் போக்கை கண்டித்து முதன்மைக் கல்வி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்
அன்பிற்கினிய பட்டதாரி ஆசிரிய நண்பர்களே,
*TNHHSSGTA*
போராளிகளே வணக்கம்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கரூர் மாவட்டம் *மணவாடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்* ..... ஆசிரியர்களுக்கு எந்த ஒரு பணப்பயனையும் பெற்றுத்தர மறுத்துவருகிறார்.
மேலும் ஆசிரியர்களின் சம்பளத்தை ஆசிரியரின் அனுமதி இல்லாமல் விதிகளுக்கு முரனாக குறைப்பதும் கேட்டால் தகுந்த பதிலையும் சொல்லாமல் *விக்கிரமாதித்தன் கதையை மிஞ்சும் கதைகளை* கூறி வருகிறார்.இவரது *ஆசிரியர் விரோத செயல்களை* பல முறை உயர் அலுவலர்களுக்கு தெரியப்படுத்தியும் பலன் இல்லாமல் போனதால் இவரது ஆசிரியர் விரோத செயல்களை கண்டித்து *நாளை 24.07.2018 செவ்வாய் கிழமை மாலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்* அனைத்து ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து நடைபெறும்..
இப்படிக்கு,
*தமிழ்நாடுஉயர் நிலை மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்*...TNHHSSGTA
கரூர் மாவட்டம்
Saturday, 21 July 2018
படைப்பாற்றல் கல்வி - பள்ளியில் செயல்பட வேண்டிய செல்பாடுகள்
படைப்பாற்றல் கல்வி - பள்ளியில் செயல்பட வேண்டிய செல்பாடுகள். உணவு இடைவேளைக்கு முன் பின் நடை பெற வேண்டியவை
Friday, 20 July 2018
திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலர் சந்திப்பு
புதிய முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்ற மதிப்புமிகு.சாந்தகுமார் அவர்களை மரியாதை நிமித்தமாக திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.