கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Friday, 5 March 2021

அரசு பள்ளிகளில் உபரி பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பாடம் போதிக்க பணி நிரவல் செய்திட அரசு மேற்கொண்ட முயற்சியினை கேள்விப்பட்ட நமது மாநில தலைவர் திரு. பக்தவச்சலம் அவர்கள் தொலைபேசி மூலம் நமது மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். உபரி பட்டதாரி ஆசிரியர்களின் விருப்பம் இன்றி கட்டாயப்படுத்தி முதுநிலை பணியிடங்களுக்கு பணி நிரவல் வழங்கக்கூடாது என்று வற்புறுத்தியதன் பேரில் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் கட்டாயப்படுத்தி யாருக்கும் பணிநிரவல் தரவில்லை என்ற தகவலை நமது மாவட்ட செயலாளர் திரு.I. சிவகுமார் ,சட்ட செயலர் திரு.பூ பாண்டி ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்கள். எனவே, உபரி பட்டதாரி ஆசிரியர்கள் விருப்பமின்றி முதுநிலை பணியிடங்களுக்கு பணி நிரவலில் செல்ல வேண்டாமென TNHHSSGTA THOOTHUKUDI அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

No comments:

Post a Comment