கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Tuesday, 25 September 2018

TNHHSSGTA-மாநிலப் பொதுக்குழு முடிவுகள்- Dr. அ.மாயவன்

*மாநிலக் கழக மொத்த தீர்மான அறிக்கை*

*இடம்* : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மாநில பொதுக்குழு கூட்டம்

*நாள்* : 23.09.2018 (ஞாயிற்றுக்கிழமை)

தலைமை .. திரு *.சு.பக்தவச்சலம்* அவர்கள்

முன்னிலை : *முனைவர்.அ.மாயவன்* *Ex.*MLC* அவர்கள்

வரவேற்புரை : *எம்.சந்திரசேகரன்* கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர்

செயல் அறிக்கை: திரு *.தி.கோவிந்தன்* அவர்கள்
வரவு செலவு தாக்கல்: திரு *.கே.ஜி.பாஸ்கரன்* அவர்கள்

*கிருஷ்ணகிரி* மாவட்டம் *போச்சம்பள்ளியில்* நடந்த நம்பேரியியக்கத்தின் மாநிலப் பொதுக்குழுவில் எற்படுத்தப்பட்ட சிறப்புமிக்க தீர்மானங்கள்👇👇👇

*1.* *புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்து* பழைய பென்சன் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும், 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உணடியாக வழங்கிட வேண்டும்.3000 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை மூடும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும். 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி *04.10.2018* அன்று ஜாக் டோ_ ஜியோ நடத்தும் *ஒரு* *நாள் ஒரு சிறு விடுப்பு* போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்து போராட்டத்தில் ஈடுபடுவதும் என்றும் *13.10.2018* அன்று சேலத்தில் நடக்க இருக்கும் ஜாக் டோ ஜியோவின் வேலை நிறுத்த *ஆயத்த மாநாட்டில்* பெருந்திரளாக பங்கேற்பது என்றும் மேற்கூறிய கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவில்லையென்றால் *27 .11 .2018* முதல் ஜாக் டோ-ஜியோ *வேலை நிறுத்தப்*போராட்டத்திற்கு* முழு ஆதரவு அளித்து அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அதிதீவிரமாக பங்கேற்பது என்றும் இப்பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது.
*
2.  *உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் இனி உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது*

பதவி உயர்வு பெற்ற முதுகலைபட்டதாரி ( *PG* ) ஆசிரியருக்கு வழங்க இனி ஒருபோதும் தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் *அனுமதிக்க விடாது.* தவறும் பட்சத்தில்  நீதிமன்றத்தை நாடுவது எனவும் தீர்மானம் இயற்றப்பட்டது.

3. உயர் நிலை - மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் *வட்டாரக் கல்வி அலுவலர்களாக (BE0) 50% விழுக்காடு வழங்கிட* தமிழக அரசையையும் கல்வித்துறையையும் இப்பொதுக்குழு வேண்டுகிறது

4.. பணி நிரவல் என்ற பெயரில் எண்ணற்ற ஆசிரியர்களை இடமாற்றம் செய்து அதன் காரணமாக பல பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம் போதிக்கவும்  அறிவியல் பாடம் போதிக்கவும், வரலாறு பாடம் போதிக்கவும் ஒரு பட்டதாரி ஆசிரியர் கூட இல்லாத அவல நிலையை கல்வித் துறைக்கு வேதனையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

அனைத்து பள்ளிகளிலும் அனைத்து பாடங்களையும் போதிக்க தேவையான அளவிற்கு பட்டதாரி ஆசிரியர் களை உடனடியாக பணி நியமனம் செய்ய தமிழக அரசையும், கல்வித்துறையையும் வற்புறுத்துகின்றோம்.

5.. *மனமொத்த இடமாறுதல்* வேண்டி ஆசிரியர்கள் விண்ணப்பித்து பல மாதங்கள் ஆன பின்பும் இன்னும் *மனமொத்த இடமாறுதல் வழங்காமல்* பள்ளிக்கல்வித் துறை காலம் தாழ்த்தி வருவதை இப்பொதுக்குழு மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மனமொத்த இடமாறுதலுக்கு ஆணை வழங்கிட பள்ளிக்கல்வித் துறையை வற்புறுத்துகிறது

6. *உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களும் PG ஆசிரியர் பணியிடங்களும் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட்டு இருப்பதால் தற்போது பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி ஏற்பட்டுள்ளன. ஆகவே மீண்டும் பட்டதாரி ஆசிரியர் களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு இடமாறுதல்* நடத்திட வேண்டும் என்று கல்வித்துறையை வற்புறுத்துன்றது.

7. கடந்த *மூன்று ஆண்டுகளாக வரலாறு பட்டதாரி ஆசிரியர்களுக்கு, வரலாறு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படாத அவல நிலை நீடித்து வருகின்றது. இதற்கு தடையாக இருப்பதை உடனடியாக சரி செய்து வரலாறு பட்டதாரி ஆசிரியர் களுக்கு வரலாறு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கிட* விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுக்குழு வற்புறுத்துகின்றது

மற்ற பாட ஆசிரியர்களுக்கு *வரலாறு போதிக்கும் ஆசிரியர்களுக்கும் 7 பாடவேளைகளை ஒதுக்கிட வேண்டும்* என தீர்மானிக்கிறது.

8. *வரும் டிசம்பர் மாத கடைசி வாரத்தில் சென்னையில் தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பல்லாயிரக் கணக்கில் பங்கேற்கும் அளவில் பிரம்மாண்டமான சிறப்பு மாநாட்டை நடத்துவது என்றும் அதற்கு அனைத்து கட்சி தலைவர்களையும் தொழிற்சங்க தலைவர்களையும் . தோழமை சங்க தலைவர்களையும் அழைப்பது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.* அதற்காக 90 பேர் அசங்கிய மாநாட்டு வரவேற்புக் குழு ஒன்றையும் இப்பொதுக்குழு அமைக்கிறது.

9. *2004 - 2006 வரை* தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட அனைத்து பட்டதாரி ஆசிரியர்களையும் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து *பணிவரன்முறை செய்து  சேர வேண்டிய அனைத்து பனபலன்களை உடனடியாக வழங்கிட* தீர்மானிக்கிறது

10. நம்முடைய *பொதுச் செயலாளர்* அவர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பெற்றமைக்கு பொதுக்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மாநில மாநாடு டிசம்பர் மாத இறுதியில் நடைபெற உள்ளது. *மாநில மாநாடு முடியும் வரை அவர் பொதுச் செயலாளராக நீடிக்க* இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. அதற்கு *பிறகு அடுத்த மாநிலப் பொ துக்குழுவில் புதிய பொதுச் செயலாளரை நியமிக்க* தீர்மானிக்கிறது

11. ஜாக் டோ-ஜீயோ 2017 வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களில் 22.08.2017 ஐ தவிர அனைத்து வேலை நிறுத்த நாட்களுக்கும் ஊதியப் பிடித்தம் இல்லாமல் ஊதியம் வழங்கப்பட்டு விட்டது. அதுவே விடுபட்ட *22. 08. 2017 ஒரு நாளுக்கு மட்டும் ஊதியம் வழங்கிட* ஆணை பிறப்பிக்குமாறு பொதுக்குழு வேண்டுகிறது.

12. இவ்வாண்டு பல *நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட அரசு உய்ர்நிலைப் பள்ளிகளுக்கு உடனடியாக  கலந்தாய்வு* முறையில் தலைமை ஆசிரியர்களை நியமிக்க பொதுக்குழு வேண்டுகிறது.

13. நமது மாநிலக் கழகத்தின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்வதற்காக *உள் தணிக்கையாளர்களாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திரு .மோகன் அவர்களையும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.துளசிங்கம்* அவர்களையும் இப்பொதுக்குழு நியமிக்கிறது.

  *தீர்மான வெளியீடு :*

*திண்டுக்கல் முனைவர்.மு .முருகேசன்*
*மாநில செய்தி தொடர்பு செயலாளர்*
*தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்*
*(மாநிலக் கழகம்)*

Wednesday, 12 September 2018

தமிழகத்தில் 662 ஆரம்ப பள்ளிகளை மூட அரசு தீவிரம்: மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் முடிவு

தமிழகத்தில் 662 அரசு ஆரம்பப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் தமிழக அரசு நடத்திய ஆய்வில் 900 தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் 10-க்கும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால் உத்தரவிற்கு பின்னரும் 662 ஆரம்பப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயரவில்லை.

இதனால் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கை பற்றியும் அரசு ஆலோசனை செய்து வருகிறது. மூடப்படும் பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கல்வியை ஊக்குவிப்பதற்காக மதிய உணவு திட்டம், விலையில்லா சீருடைகள் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் குறிப்பிட்ட அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை குறைந்துகொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

Tuesday, 4 September 2018

மாநிலச் செயலாளர் திரு.வேலூர் ஜெயக்குமார் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்து மடல்

*தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்*
✍✍✍✍✍✍✍✍✍
*நிறுவனத்தலைவர் மதிப்புமிகு : முனைவர் :அ.மாயவன் Ex.MLC*
💐💐💐💐💐💐💐💐💐
*ஆசிரியர் தின வாழ்த்து மடல்*
✍✍✍✍✍✍✍✍✍
அறிவு விளக்கை
ஏற்றி வைக்கும்
கலங்கரை விளக்கே
உன்னை
வணங்கி மகிழ்கிறேன்🙏

ஒவ்வொரு வருடமும்
பத்து மாதம்
மாணவர்களை
செதுக்குகிறீர்கள்
தங்களின் விழிகள்
மூடாமல் ......

மாணவர்களின்
கனவுகளை
கைவசப்படுத்தி
கொடுக்க உதவும்
தூண்டுகோலாக
திகழும் - தியாகிகளே
தங்களை
வாழ்த்தி மகிழ்கிறேன்💐

பலரை அரியாசனம்
ஏற்றுகிறோம் - நம்
சிரியாசனத்தில் - கூட
அமராமல்.
திரிகள் பல
மாறிக்கொண்டிருக்கு
விளக்காய் - நாம்
மட்டும் மாறாமல் .....

தினம் தினம்
பூக்கும்
மலர்களைப்போல
உற்சாகமாய்
மாணவர்களை
பட்டை தீட்டும் – நாம்
மாலையில் கூட
சோர்ந்து விடுவதில்லை
சூரியகாந்தி போல ......

நாம் (ஆசிரியர்கள்)
ஒரு கலைசிற்பி
நாம் செதுக்கும்
ஒவ்வோர் சிலையும்
அக்கல்லை பொருத்தே
அமைகின்றது.

எத்தனை ஆயிரம்
ஆசிரியர்கள் - நாம்
ஆனால்
நம் நோக்கம்
நம் லட்சியம்
ஒன்றேதான்
என் மாணவன்
முன்னேற வேண்டும்
தேர்ச்சி பெற வேண்டும்
வெற்றிபெற வேண்டும்
ஆஹா
எத்தனை உயரிய எண்ணம்
நமக்கு - நாமல்லவா
வணக்கத்திற்குரியவர்கள்........

எத்தனை கேலிகள்
எத்தனை கிண்டல்கள்
எத்தனை துன்பங்கள்
எத்தனை தொல்லைகள்
மாணவர்களிடமிருந்து
மட்டுமா - அல்ல
இந்த சமூகமும்
நம்மை விட்டு வைக்கவில்லை
இதையெல்லாம்
சட்டை செய்யாமல்
என் பணி - பணி
செய்து கிடப்பதே
என்று - தன்
கடமையில் இருந்து
தவறாமல் - உழைக்கும்
அன்பு உடன் பிறப்புக்களே
உங்களை வாழ்த்தி
வணங்குகிறேன்🙏

எத்தனை அன்பு
எத்தனை அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள்
எத்தனை ஆலோசனைகள்
மாணவர்கள்
ஏற்றுக்கொண்டாலும்
இல்லை என்றாலும்
நாம் - அவர்களை
ஊக்கப்படுத்திக் கொண்டு தானே
இருக்கின்றோம்
நீயல்லவோ
அற்புத மனிதன்
உன்னை
வாழ்த்தி மகிழ்கிறேன்💐

மெழுகுவர்த்தி
தன்னையே உருக்கி
பிறருக்கு
வெளிச்சம்
தருவது போல
நீயும்
வாழ்நாள் முழுவதும்
மாணவர்களுக்காக
தன்னையே - உருக்கி
மாணவர்களின்
வாழ்க்கையில்
தீப ஒளியை
ஏற்றிக்கொண்டிருக்கிறாயே
நீயல்லவோ
ஒளிவிளக்கு ......

நாள் முழுவதும்
சுண்ணக்கட்டியை
தேய்த்து தேய்த்து
அதன் துகள்கள்
ஒவ்வொன்றினையும்
சுவாசித்து - தன்னையே
கொஞ்சம் கொஞ்சமாக
இழந்து
கொண்டிருக்கிறாயே
உன் தியாகத்திற்கு
உண்டோ
ஈடு - இணை
இவ்வுலகில் .....

ஆசிரியர்களை
போற்றும்
இந்நாளில்
ஆசிரியர்களுக்காக வாழ்ந்துகொண்டிருக்கும்
பட்டதாரி ஆசிரியர்களை பாதுகாக்கும்
ஒரே தலைவன்
என் நெஞ்சமெல்லாம்
நிறைந்துள்ள
*மதிப்புமிகு : முனைவர். அ.மாயவன் Ex.MLC* அவர்களின்
வழி நின்று
என் ஆசிரிய
சொந்தங்கள் உங்கள்
அனைவரையும்
ஆசிரியர் தினத்தில்
வாழ்த்தி
மகிழ்கிறேன்
வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐

வாழ்த்தும் மகிழ்வில் .......

*சி.ஜெயக்குமார், மாநிலச்செயலாளர், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் .*

ஆசிரியப் பெருமக்களுக்கு -ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி - உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.

ஆசிரியப் பெருமக்களுக்கு -ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்- முன்னால் பள்ளிக் கல்விச் செயலரும் இந்நாள் தொல்லியல் துறை அணையருமான மதிப்புமிகு. உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.அவர்கள்

Saturday, 1 September 2018

முதல்வரைக் கண்டித்து அ.மாயவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பாக மாண்புமிகு. முதல்வர் அவர்கள் ஆசிரியர் அரசு ஊழியர்களின் சம்பளத்தை தரக்குறைவாக பேசியதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.மாயவன் அவர்கள் தலைமையில் நடந்தது. மேலும் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் திரு.சு.பக்தவச்சலம் அவர்கள், சென்னை மாவட்ட தலைவர் திரு.சாந்தகுமார் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்