கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Friday, 6 July 2018

புதுக்கோட்டை பொதுக்குழுக்கூட்டம் செல்வேந்திரன் அவர்கள் தலைமையில் நடந்தது

*தமிழ்நாடு *உயர்நிலை மேல்நிலைப்பள்ளி *பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் புதுக்கோட்டை *மாவட்டப்பொதுக்குழுக்கூட்டம் அரசு *இராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி *புதுக்கோட்டையில் மாவட்ட தலைவர் *அ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது*. மாவட்ட செயலாளர் மா.குமரேசன் செயலறிக்கையும் பொருளாளர் முத்துக்கருப்பன் வரவுசெலவு படைத்தார்

*தீர்மானங்கள்*
*.இயக்க நடவடிக்கை சார்ந்து
1.உறுப்பினர் சேர்க்கை 15வட்டங்களுக்கு தலா 2மாவட்டப்பொறுப்பாளர்கள் மற்றும் வட்டத்தலைவர் செயலர் பொருளர் கொண்ட
15குழுக்கள் 3நாட்களில் உறுப்பினர் சேர்க்கையை இம்மாத இறுதிக்குள் முடிப்பது அடிக்கட்டைகளை ஆகஸ்ட் முதல்வாரத்தில் மாவட்ட பொருளாளரிடம் முழுமைப்படுத்துவது
2.தொழிற்சங்க பயிற்சிமுகாம் வட்டஅளவில் செப்டெம்பருக்குள் நடத்துவது
*மாநிலக்கழகம்தலையீடுசெய்யவேண்டுவன*
1.உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடத்தை உடன் நிரப்பிட தலையீடு
2.வரலாறு முதுகலைபட்டதாரி பதவிஉயர்வுகளை உடன் நடத்தப்படவும்
3.மேற்கண்ட பதவி
உயர்வுக்குப்பின் உருவாகும் காலிப்பணியிடங்களுக்கு உடனடியாக பொதுமாறுதல் நடத்திடவேண்டும்
4.ஆங்காங்கு பணியாளர் நடத்தைவிதிகளுக்கு விரோதமாகவும்
நடைமுறையில் விதிகளின்படியான  9.30. -4.30 என்ற நேரத்திற்கு விரோதமாகவும் செயல்பட்டு ஆசிரியர்களை 9.30க்கு  முன்பாக *த/வி* போடும் விதிமீறலை இயக்குநர் வசம் தலையிடு செய்து முறைப்படுத்வேண்டும்
5.ஜாக்டோஜியோ போராட்டங்களை மேலும் ஆக்கபூர்வமாய் போராட்ட வடிவம் எடுக்கும் மாநிலக்கழக
செயலுக்கு ஆதரவு தொடர்ந்து தருவது.
*ஆசிரியர்கள் சார்பான கோரிக்கைகள்* மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மாவட்டக்கல்வி அலுவலர் ஸ்தல கோரிக்கைகளை ஒட்டி சார்ந்த அலுவலர்களை சந்தித்து முறையீடு செய்வது தீர்வுகாண முயல்வது மற்றும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனன. மாவட்டப்பொறுப்பாளர்கள் உள்ளிட்ட
வட்டப்பொறுப்பாளர்கள்  அனைவரும் திரளாக பங்கேற்றனர்

No comments:

Post a Comment