*திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வெ.ஜெயக்குமாரின் காட்டுமிராண்டித்தனமான அராஜகப் போக்கை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்.*
📌திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அதிகாரியாக இருக்கும் வெ.ஜெயக்குமார் GO. 101 ஐ தவறாகப் பயன்படுத்தி நிர்வாக மாறுதல் மாற்றுப் பணிபணிநிரவல் என்ற பெயரில் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசாங்க விதிமுறைகளைப் பின்பற்றாமல் பல லட்சங்களை சம்பாதித்துளார்.
📌மீளாய்வுக் கூட்டம் என்ற பெயரில் பெண் ஆசிரியைகளை வர வைத்து ஒருமையில் திட்டுவது மரியாதை இல்லாமல் நடத்துவது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வருகின்றார் ஆசிரியைப் பெருமக்கள் மன உளச்சலுடனும் பயத்துடனும் வேலை பார்த்து வருகின்றனர்.
📌பருவத் தேர்வு காலாண்டு அரையர் ண்டு விடைத்தாள் பேப்பர்களை கொண்டு வரச் செய்து சரியாக மதிப்பீடு செய்து இருக்கின்றார்களா என பார்த்து விட்டு விடைத்தாள்களை திருப்பித் தராமல் விற்று பல லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளார்.
இப்படிபட்ட அராஜகப் போக்கை கண்டித்து அனைத்து வகை ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் *தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் Dr.அ.மாயவன் Ex. MLC .அவர்கள்* கண்டன உரை நிகழ்த்திய போது அரசு உடனடியாக அவரை தூக்கிட வேண்டும் என்றார். அவரைத் தொடர்ந்து *மாநிலத் தலைவர் திரு.சு.பக்தவச்சலம் அவர்களும்* அராஜகப் போக்கை கண்டித்து உரையாற்றினார்.கூட்டத்தில் நம் தலைமை நிலையச் *செயலர் திரு.விஜயசாரதி* அவர்கள், மாவட்டத் தலைவர் செயலர் பொருளாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைத்து ஆசிரிய சங்கங்களின் சார்பாக 3000 ஆசிரிப் பெருமக்கள் கலந்து தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள்.
வெளியீடு
மு .முருகேசன்
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
No comments:
Post a Comment