கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Tuesday, 2 March 2021

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனர் Dr.அ.மாயவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாநில,மாவட்ட, வட்டப் பொறுப்பாளர்கள், பிச்சைக்கனி, விஜயபாலன், ஐயப்பன்,ராஜசுதாஸ், ஆல்பின் பெலிக்ஸ்,புலிக்குட்டிபாண்டியன் ஆகிய ஆறு பட்டதாரி ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள 1,காலிப்பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க தடையாணை கேட்டும் 2, கொரனா காலத்தில் பிறப்பித்த ஆணைகளை ரத்து செய்து, பணிமாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளோடு மதுரை உயர்நீதி மன்றத்தில் இன்று நீதிபதி ரமேஷ் அவர்களிடம் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார். முடிவில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவிஉயர்வு கலந்தாய்வு நடத்தக் கூடாது எனவும். வரும் ஏப்பிரல் 7 முதல் 30 க்குள் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment