கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Tuesday, 2 March 2021

*தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்* *மாநில தகவல் அறிக்கை* **நமது பேரியக்கத்தின் நிருவனர் முனைவர் அ.மாயவன் தொடுத்த வழக்கிற்க்கு மார்ச் 8- ஆம் தேதி தேர்தல் ஆணையம் பதிலளிக்க - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு* *2021 சட்டமன்றத் தேர்தலில்* பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்கு *சிறப்பு வாக்களிப்பு மையம் அமைக்க வேண்டும்* என வலியுறுத்தி இன்று நம் பேரியக்கத்தின் *நிறுவனர் முனைவர் அ.மாயவன் அவர்களால்* சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கானது *சிறப்பு தலைமை நீதிமன்றத்தில்* *CHIEF COURT* ல் *சீப் ஜஸ்டிஸ் முன்* இன்று காலை 11 மணிக்கு விசாரனை க்கு வந்தது.*விசாரணையின்போது* *மதிப்புமிகு.நீதியரசர்* அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் *திரு.கா.சாந்தகுமார்* (தற்போது நம்பேரியியக்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் மற்றும் ஜாக்டோஜியோவின் ஒருங்கிணைப்பாளர்) அவர்கள் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 65000 வாக்குகள் தேர்தல் ஆணையத்தால் ஏன் நிராகரிக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.அதற்கு தேர்தல் ஆணையம் 65,000 தபால் வாக்குக்கள் படிவம் 12 முறையாக நிரப்படாமல் இருந்ததால் நிராகரிக்கப்பட்டது என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் கூறினார். *குறுக்கிட்ட மாண்புமிகு.நீதியரசர்.* தேர்தல்பணியில் கடமையாற்றியவர்களின் 65000 வாக்குகளை வீணடித்திருக்குறீர்கள். இன்று *மாயவன் அவர்களால்* தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் அவர் கேட்கும் *EVM மெஷின் மூலம் தனி வாக்குச்சாவடி மையம் அமைத்து* ஆசிரியர் அரசு ஊழியர்கள் ஓட்டுப்போட அனுமதி கேட்பதில் உங்களுக்கு என்ன கஷ்டம், குறைகள் இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.இறுதியாக தேர்தல் ஆணையம் நல்ல முடிவு எடுத்து *EVM மெஷின் மூலம் ஓட்டுப் போட ஆணையத்திடமிருந்து 8- ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மாண்புமிகு.நீதி அரசர் உத்திரவிட்டு 8-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.* தகவல்திண்டுக்கல் மு.முருகேசன்மாநில செய்தித் தொடர்புச் செயலாளர்

No comments:

Post a Comment