கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Saturday, 23 June 2018

1,200 அரசு பள்ளிகளை இணைக்க திட்டம்:தகவல் சேகரிப்பில் கல்வித்துறை தீவிரம்!!

சேர்க்கை குறைவாகவுள்ள, 1,200 அரசுப் பள்ளிகளை இணைக்க, தொடக்க கல்வித்துறை தகவல் சேகரித்து வருகிறது

. அத்துடன்,, அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை,, காலியிடங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில், தொடக்க கல்வி இயக்ககத்தில் செயல்படும், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வருகிறது. நடப்பாண்டு, புதிய மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி மாணவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது. 

அதன் இயக்குனர் கருப்பசாமி உத்தரவுப்படி, 10க்கும் குறைவாகவுள்ள மாணவர்கள், படிக்கும் பள்ளிகள் பட்டியல் திரட்டப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், போதிய கற்பித்தல் பணிகளின்றி சம்பளம் பெறுகின்றனர்.

இதனால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய, பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, இணைக்கப்பட வேண்டிய பள்ளிகள், ஆசிரியர்களின் விபரங்களை திரட்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், மாவட்ட செயலாளர் முருகவேள் கூறியதாவது: தமிழகத்தில், 37 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 20 மாணவர்களுக்கு குறைவாக, 890 பள்ளிகள் உள்ளதாக, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தற்போது, 10 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பள்ளிகளின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது

1 comment:

  1. அரசு பள்ளிகளின் சேர்க்கையை அதிகரிக்க திட்டம் போடாாமல் பள்ளிகளை மூடுவது தான் திறமையா.

    ReplyDelete