*அன்பிற்கினிய பட்டதாரி ஆசிரியர் நண்பர்களே! வணங்கி மகிழ்கிறோம்*..... நமது சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா *31.3.18 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு* உங்களுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளுடன் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு மிக்க விழா தமிழகத்திலேயே நமது சங்கத்தின் முத்தாய்ப்பான *ஒரு மைல் கல்* என்பதை தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம். *புதிய அலுவலகத்தை சங்கம் பாராமல் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணற்ற சலுகைகளை, பணப் பலனை பெற்றுக் கொடுத்து வருபவரும், ஆசிரியர்களோடு ஒன்றாய் கலந்திருப்பவரும், எளிமையின் சிகரமானவரும், பாதுகாவலருமான நிறுவனர் திரு. அ. மாயவன் Ex.MLC அவர்கள் பொற்கரங்களால்* திறந்து வைத்து வாழ்த்தி பேசுகிறார். அவரது உடன்பிறவா சகோதரருமான *அமைதியின் ஆலமரம் நமது மாநில தலைவர் திரு.எஸ். பக்தவச்சலம்* அவர்கள் நமது சங்கக் கொடியை ஏற்றி வைக்கிறார். மாவட்ட தலைமை அலுவலகத்தின் பெயர்ப் பலகையை *ஆற்றல் மிக்க பொதுச் செயலாளர் திரு.கோவிந்தன்* அவர்கள் திறந்து வைக்கிறார். விழாவிற்கு அழகு, பெருமை சேர்க்கும் வகையில் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் *நல்ல உள்ளம் கொண்ட சிகப்பு மனிதர் திரு.ஆனந்தன்,* தலைமை நிலைய செயலாளர் செல்லமே செல்லம் *திரு.சாரதி,* மாநில மகளிரணி செயலாளர் *திருமதி.சுமதி, சென்னை மாவட்டத்தின் *ஹீரோ திரு.சாந்தகுமார்,* காஞ்சி மாவட்டத்தின் *இரும்பு, கரும்பு மனிதர் திரு.ஜெயமுருகன்* உள்ளிட்ட இரு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் வருகை புரிகின்றனர். இந்த அற்புதமான நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் நண்பர்கள், மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம். அனைவரையும் *நிறுவனர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்து தேனீர் விருந்து அளிக்கிறார்.* அனைவரையும் கைக்கூப்பி வரவேற்கும்..... *சி.முரளி* மாவட்டத் தலைவர், *துரை. பாண்டியன்* மாவட்ட செயலாளர், *ஜி.வி.கார்த்திகேயன்* மாவட்ட பொருளாளர், *என்.பிரேம்குமார்* மாவட்ட செய்தி தொடர்பாளர், *டி.தணிகாச்சலம்* மாவட்ட தலைமை நிலைய செயலாளர், *கே.ஜெயராமன்,* மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் *திருமதி.வேண்டாபாய், *திருமதி. உமாராணி,* உங்களில் ஒருவர் *சாமி.*
No comments:
Post a Comment